இணைப்பும் -பதைப்பும்.

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.,

தற்பொழுது BSNL – MTNL இணைப்பு குறித்த தகவல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. BSNL- MTNL இணைப்பு குறித்து Unions and Associations தலைவர்களிடம் வருகிற 28.02.2023 அன்று பேசிட வேண்டுமென CMD அழைத்து இருக்கிறார்.

இணைப்பு குறித்த தகவல்களை அறிவிப்பதாக மட்டும் இந்த கூட்டம் அமைந்து விடக்கூடாது. ஊழியர்/ அதிகாரிகள் தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்து அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பு.

MTNL நிறுவனத்தினுடைய வருவாயை விட செலவினங்கள் அதிகமாக இருக்கின்றது. MTNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் குறைந்தபட்சம் 3200 பேர் (Staff strength-3600 as on 31.3.2021.) இருக்கக்கூடும். Merger மூலம் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லாத சூழல் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பாக இது போலத்தான் ITI நிறுவனம் BSNL நிறுவனத்துடன் இணைக்கப்படும் என்கிற அரசின் முன்மொழிவை எதிர்த்து நாம் போராடி வெற்றி கண்டு இருக்கிறோம்.

MTNL நிறுவனத்தின் liability and asset BSNL கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், டெல்லி – மும்பை சேவைகள் BSNL மூலம் வழங்கப்படும் என்றும், MTNL ஊழியர்கள் / அதிகாரிகள் BSNL லில் இணைக்கப்படுவார்கள் என்றும் அறிவிப்பை வெளியிடுவதற்கான கூட்டமாக மட்டுமே இது அமைந்து விடக்கூடாது.

ஏற்கனவே நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிற BSNL நிறுவனம் 4 ஜி சேவை கொடுக்காமல் தாமதப்பட்டுக் கொண்டிருக்கிற சூழலில் இந்த merger க்கு பிறகு லாபகரமாக இயங்குமா என்கிற கேள்வியும் இருக்கிறது. எனவே இந்த இணைப்பின் மூலம் நமக்கு நஷ்டம் ஏற்படக்கூடிய சூழல் இருந்தால் அதை அரசு தான் ஏற்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே நிதி நெருக்கடியில் தத்தலித்துக் கொண்டிருக்கக் கூடிய BSNL நிறுவனத்துடன் MTNL ஐ இணைப்பது என்பது மேலும் BSNL நிறுவனத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க கூடும் என்கிற ஐயப்பாடு ஊழியர் மத்தியில் நிலவுகிறது.

இவை யாவற்றையும் 28.2.2023 கூட்டத்தில் CMD அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாக உள்ளது. இணைப்பிற்கு முன்பாக identified MTNL assets போக பாக்கி இருக்கிற சொத்துக்கள் யாவும் (DIPAM Department of investment and public assets management) வசம் ஒப்படைக்கப்படலாம். இணைப்பிற்கு பிறகு balance sheet ல் MTNL லின் நஷ்டத்தையும் சேர்த்தால் மேலும் நமது நிதிநிலை பலவீனம் அடைய வாய்ப்பு இருக்கிறது.

ஊழியர்கள் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை போக்கும் வகையில் இந்த கூட்டம் அமைந்திட வேண்டும் என்பதுதான் அனைத்து ஊழியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த கூட்டத்திற்கான குறிப்பு பதிவு செய்யப்பட்டு அது பொதுவெளியில் அனைவர் பார்வைக்கும் வைக்கப்பட வேண்டும்.

குறைந்தபட்சம் இந்த இணைப்பின் போதாவது மத்திய அரசு நமது நிறுவனத்திற்கு 4G/ 5G சேவை மற்றும் வங்கி கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு சம்பளம் மாற்றம் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் என்பதையெல்லாம் உறுதிப்படுத்த வேண்டும் என நாம் நிர்பந்திக்க வேண்டும்.

BSNL நிறுவனத்தின் சேவைகளை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் குறைந்தபட்ச அளவிலாவது பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என நாம் கோர வேண்டும். MTNL க்கு இணையான ஊதியம் கோரி போராடிய நமக்கு தற்பொழுது இணைப்பு என்று சொல்லுகிற பொழுது அச்சமாக இருக்கிறது.

பொதுத்துறை மீதான மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா சர்காரின் பொதுத்துறை விரோத கொள்கைகளே இதற்கு காரணம்.