தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
Join forum for non executive unions and associations of BSNL சார்பாக நேற்று 7.2.2023 நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நமது சகோதர சங்கங்களான SEWA-BSNL , TEPU சங்கங்கள் இணைக்கப்படாமல் இருப்பது குறித்து கடந்த வாரம் நமது அகில இந்திய செயலாளர் தோழர் C.சிங் அவர்களிடம் பேசி இருந்தோம். அவர்களுக்கு தகவல் தரப்பட்டதாகவும் அதை தானும் கவனிப்பதாகவும் கூறியிருந்தார்.
இன்று 8.2.2023 அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் C.சிங் அவர்களை தொடர்பு கொண்டு இது குறித்து மாநில செயலர் நடராஜன் பேசி இருக்கிறார்.
நேற்றைக்கு 7.2.2023 உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் முடிந்ததற்கு பின்னால் நடைபெற்ற கூட்டத்தில் நமது சகோதர சங்கங்களான SEWA-BSNL, TEPU அமைப்புகளை இணைத்து இயக்களை நடத்துவது குறித்து மீண்டும் கேள்வியை எழுப்பி இருக்கிறார் நமது பொதுச்செயலாளர்.
மேலும் நமது அகில இந்திய பொதுச் செயலாளர் நேரடியாக SEWA-BSNL, TEPU சங்கங்களின் பொதுச்செயலாளர்களிடம் பேச வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலச் செயலாளர் நடராஜன் எழுப்பியிருக்கிறார்.அனைவரையும் ஒன்றிணைத்து இயக்கங்களை நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்.
குறிப்பாக தேர்தல் நேரத்தில் நம்மோடு களத்தில் நின்று நமது அங்கீகாரத்திற்காக உதவிட்ட சங்கங்களை நாம் என்றும் மறந்து விடுவதில்லை, நன்றி மறப்பதும் இல்லை. அகில இந்திய சங்கம் அதற்கான வேலையில் ஈடுபட்டு இருக்கிறது. ஏற்கனவே நமது மாநிலச்சங்கம் அகில இந்திய சங்கத்தோடு தொடர்பு கொண்டு இது குறித்து வலியுறுத்தி இருக்கிறது என்பதை இதன் மூலம் பதிவு செய்ய விரும்புகிறோம்.
நமது அகில இந்திய துணைத் தலைவர் தோழர் S. பழனியப்பன் அவர்களும், தேசிய செயலாளர் தோழர் R. ஸ்ரீதர் அவர்களும் அகில இந்திய தலைமைக்கு message செய்துள்ளனர்.
NFTE-BSNL அகில இந்தியச் சங்கம் / மாநிலச் சங்கம் மற்றும் மாவட்டச் சங்கங்கள் ஒரு போதும் நன்றி மறக்காது.. என்பதை இவ்விடம் தோழர்களுக்கு அறுதியிட்டு கூற விரும்புகிறோம்.