சென்னை கூட்டுறவு சங்கம் – போராட்டங்கள்

மாவட்ட செயலர்களின் மேலான கவனத்திற்கு. தோழர்களே வணக்கம்.

தோழர்களே நாம் வெகு நாட்களாக NFTE-BSNL, BSNLEU,SNEA, AIBSNLEA மாநிலச் சங்கங்களின் சார்பில் சொசைட்டியில் நியாயம் கோரி சட்டம் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறோம்.குறிப்பாக நமது சட்ட போராட்டத்தின் மூலமாக தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கும் இந்த பிரச்சனைகள் குறித்து கொண்டு சென்றுள்ளோம். நமது தோழர்களின் துயர் துடைக்க மாநில நிர்வாகம் ஏதேனும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என CGM அவர்களிடம் வேண்டுகோள் வைத்தோம். மாநில நிர்வாகம் தனது நிர்வாக எல்லைக்கு உட்பட்ட விஷயங்களில் தலையிட்டு தீர்வு காண்பதற்கான முயற்சியையும் எடுத்து வருகிறது.
இந்தச் சூழலில் சொசைட்டியில் இதுவரை நடந்த விஷயங்கள் குறித்தும் நாம் தொடர்ந்து எடுத்து வருகிற நடவடிக்கைகள் குறித்தும் தோழர்கள் மத்தியில் கொண்டு செல்வது என்ற முடிவின் அடிப்படையில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தர்ணா நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

1.சொசைட்டி நிர்வாகம் நமது தோழர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை விரைந்து பெற்றுத் தந்திடவும்,

  1. முறையாக நடத்தப்பட்டிருக்க வேண்டிய சொசைட்டி தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டியும் நாளை 19.01.2023 உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தை மாவட்டங்களில் வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
    சென்னையில் மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 19.01.2023 அன்று மதியம் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெறும். தோழர்கள் அனைவரும் திரளாய் பங்கேற்க வேண்டும் என தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.