NATIONAL FEDERATION OF TELECOM EMPLOEES
BSNL EMPLOYEES UNION
தமிழ் மாநிலச்சங்கங்கள்
தலைமைப் பொதுமேலாளருடன் சந்திப்பு
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
NFTE – BSNLEU தமிழ் மாநில சங்கங்கள் சார்பாக தலைமைப் பொதுமேலாளருடன் 2.1.2023 நேற்று மாலை 4.30 மணிக்கு ஊழியர் பிரச்சனைகள் சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் NFTE சார்பாக மாநில தலைவர் தோழர் G.S.முரளிதரன், மாநிலச் செயலாளர் தோழர் K.நடராஜன் மற்றும் , BSNL ஊழியர் சங்கம் சார்பாக தோழர் S.செல்லப்பா AGS, தோழர் P.ராஜூ மாநில செயலாளர்,தோழர் K.சீனிவாசன் மாநில உதவிச்செயலாளர், ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ் கண்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.
- பொங்கல் தினம் 14-1-2023 ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு பதிலாக 18-2-2023 அன்று (மஹா சிவராத்திரி) விடுமுறை வழங்க இரு சங்கங்களும் எழுத்து பூர்வமாக நிர்வாகத்திற்கு தெரிவித்திருந்தோம். ஆனால் நமது கோரிக்கையை நிர்வாகம் பரிசீலிக்காமல் 2023 க்கான holiday list ஐ வெளியிட்டு விட்டது. இது சரி இல்லை என சுட்டிக்காண்பித்து 7-12-2022 அன்று கடிதமும் கொடுத்தோம். ஆனால் நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை. இன்று தலைமை பொது மேலாளரிடம் இந்த பிரச்சனையை ஆழமாக விவாதித்தோம்.ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் மட்டுமே, பெரும்பான்மையான ஊழியர்களுக்கு பலனளிக்கும் வகையில் விடுமுறை தினத்தை பிப்ரவரி 18 , 2023 அன்று மாற்றித் தர வேண்டும் என எடுத்துரைத்தோம்.
தலைமை பொது மேலாளர் அவர்கள் நமது கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறியுள்ளார்கள்.
- சமீபத்தில் மாநில நிர்வாகம் SOFT TENURE என்ற முறையில் மார்ச் மாதத்தில் ஊழியர்களை ஊர் மாற்றம் செய்ய திட்டமிட்டிருந்தது. மாநில சங்கங்களுக்கு தகவல் தந்து விவாதிக்கப்பட்டது. மாவட்டச் சங்கங்களை நிர்வாகம் கருத்துக்கூட கேட்கவில்லை. தலைமை பொதுமேலாளரிடம் நிர்வாகத்தின் இந்த அணுகு முறை முற்றிலும் சரி இல்லை என்று வாதிட்டோம். மேலும் இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகங்கள் மாவட்டச் சங்கங்களை அழைத்துப் பேசி SOFT TENURE தேவைதானா என விவாதித்து முடிவெடுக்க வேண்டும். அதன் பின்னர் மாநில அளவில் பேசி முடிவெடுக்கலாம் என்று கூறியுள்ளோம். SOFT TENURE தேவை இல்லை என்ற நம் கருத்தையும் பதிவுசெய்துள்ளோம்.
- மாநிலத் தலைமை பொதுமேலாளர் அலுவகத்திற்கு பின்புறம் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வருவதற்கு புதிதாக கேட் அமைக்க வேண்டும். இதனால் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு சுலபமாக இருக்கும் என வலியுறுத்தினோம். சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் கொடுத்து பேசி தீர்வுகாணப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
- தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் வரவேற்பு பகுதியில் ஊழியர்கள் வருகையை பதிவு செய்ய கம்ப்யூட்டர் with LAN CONNECTION கோரியுள்ளோம். விரைந்து கொடுத்திட நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தோழமையுடன்,
K.நடராஜன் P.ராஜூ
மாநிலச் செயலாளர் NFTE மாநிலச் செயலாளர் BSNLEU