தோழர்களே வணக்கம்.
தமிழ் மாநில செயற்குழு 15.12.2022 மாநிலத் தலைவர் தோழர் முரளிதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சங்கக் கொடியை மாநிலச் செயலர் நடராஜன் ஏற்றி வைத்தார். கோவை மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்ரமணியம் முழக்கம் எழுப்பினார்கள்.
செயற்குழுவிற்கு வந்திருந்த அனைவரையும் மாநில உதவிச் செயலாளர் தோழர் சுந்தரமூர்த்தி அவர்கள் வரவேற்றார்கள். மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர் சண்முகம் அவர்கள் அஞ்சலிவுரை நிகழ்த்தினார்கள்.
மாநிலத் தலைவர் தலைமையுரையோடு செயற்குழு தொடங்கியது.
மாநில செயலாளர் ஆய்படு பொருளை அறிமுகப் படுத்தி பேசினார்.
மாநில பொருளாளரும், அகில இந்திய துணைத் தலைவருமாகிய தோழர் பழனியப்பன் அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்கள்.
விவாதத்தில் மாவட்ட செயலர்கள் கோவை பாலசுப்பிரமணியம், குன்னூர் மோகன், ஈரோடு செங்கோட்டையன், தூத்துக்குடி பாலக்கண்ணன், திருநெல்வேலி நடராஜன், விருதுநகர் சம்பத், காரைக்குடி முருகன், மதுரை மாவட்டம் சார்பாக தோழர் பரமசிவம்,சேலம் பாலகுமார் , வேலூர் லோகநாதன்,தர்மபுரி மணி,திருச்சி மாவட்டம் சார்பாக தோழர் சண்முகம், தஞ்சாவூர் கிள்ளிவளவன், கும்பகோணம் விஜய்ஆரோக்யராஜ், கடலூர் குழந்தை நாதன், பாண்டி அபுபக்கர், CGM அலுவலக மாவட்ட செயலாளர் தோழர் மனோஜ் ஆகியோர்களும், மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் சுந்தரமூர்த்தி, சுபேதார் அலிகான், சின்னப்பா, ஆறுமுகம், மைக்கேல், சகாயசெல்வன், சீனியர் தோழர் அல்லிராஜா ஆகியோர்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து விவாதத்தை செழுமைப் படுத்தினர்.
தேசிய செயலாளர் தோழர் ஸ்ரீதர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
தோழர்களின் விவாதங்களுக்கு பிறகு மாநிலச் செயலாளர் விவாதங்களை முடித்து வைத்து உரையாற்றினார். முன்னாள் சம்மேளனச் செயலர் தோழர் காமராஜ் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்கள்.தோழர் மனோஜ் அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்து வைத்தார்கள்.
மாநில செயற்குழு சிறப்பாக நடத்திட உதவி செய்திட்ட தோழர்கள் T.V.பாலு, ஜெயச்சந்திரன், பாலகிருஷ்ணன், நந்தகுமார் ஆகியோர்களுக்கு மாநிலச் சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மாநில செயற்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
நமது உறுப்பினர் எண்ணிக்கையை காட்டிலும் கூடுதலாக வாக்குகள் பெற்றிருந்த போதிலும் இன்னும் நமது உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய அவசியத்தில் நாம் இருப்பதை இம்மாநிலச் செயற்குழு நமக்கு சுட்டிக்காட்டி இருக்கிறது.
- 2022 நடந்து முடிந்த உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் நாம் அங்கீகாரம் பெறுவதற்காக நம்மோடு களத்தில் நின்று உழைத்திட்ட சகோதர சங்கங்களாகிய SEWA-BSNL, TEPU சங்கங்களுக்கும், மாவட்ட செயலர்களுக்கும், மாநில சங்க நிர்வாகிகளுக்கும், கிளைச் செயலாளர் களுக்கும், சங்க பொறுப்பாளர்களுக்கும் மற்றும் உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற தோழர்கள் அனைவருக்கும் மாநில சங்கம் நன்றியை பதிவு செய்கிறது.
2023 July ல் தமிழகத்தில் இன்னும் கூடுதலாக உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும் என இம்மாநிலச் செயற்குழு முடிவு செய்கிறது.- கோவை மாவட்டத்தில் நன்றி அறிவிப்புக் கூட்டத்தை மிகச் சிறப்பாக நடத்திட்ட கோவை மாவட்ட சங்கத்திற்கும், தோழர்கள் அனைவருக்கும் இச் செயற்குழு நன்றியை பதிவு செய்கிறது.
- வருவாய் பெருக்கம்/ சேவை மேம்பாடு குறித்து மாவட்ட நிர்வாகங்கள் மாவட்டங்களில் நமது தலைவர்களை அழைத்து opinion leaders meeting நடத்திட வேண்டும் என இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது. அப்பொழுதுதான் தலமட்டங்களில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வாடிக்கையாளர்களுக்கு சேவை கொடுப்பதில் அவர்கள் சந்திக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை சரி செய்திட முடியும் என செயற்குழு கருதுகிறது. ஆகவே opinion leaders meeting நடத்திட வலியுறுத்துகிறது.
- வணிகப் பகுதிகளுக்கு LCM உடனடியாக உருவாக்கிட வேண்டும்.ஏற்கனவே மாநிலச் செயற்குழுவின் வழிகாட்டுதல் அடிப்படையில் வணிக பகுதிகள் தங்களது மாவட்டத்திற்கான எண்ணிக்கையின் அடிப்படையில் கவுன்சில் உருவாக்கிட வேண்டும்.
- ஊதிய திருத்த பேச்சுவார்த்தை வெகு நாட்களுக்குப் பிறகு தொடங்கியிருக்கிறது.ஊதிய திருத்த பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் முன்பாக புதிய பதவி உயர்வு (New promotion policy)திட்டத்தை இறுதி செய்திட வேண்டும். ஊதிய திருத்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளாக NFTE-BSNL, BSNLEU சங்கங்களின் சார்பில் தலைவர்கள் கலந்து கொண்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.1.1.2017 ல் நமது ஊதியம் எதுவோ அதனுடன் 119.50 % IDA ஐ இணைத்து அதற்கு 5 % Fitment கொடுக்க வேண்டும் மற்றும் இதர படிகள் ( Allowances) குறித்து விவாதிக்க வேண்டும் என்பது ஊழியர் தரப்பு கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் நிர்வாகம் 5% தர இயலாது 0 % தான் தர முடியும் என கூறுகிறது. 5 % fitment கோரிக்கையை ஏற்காமலும் இதரப்படிகள் குறித்தும் நிர்வாகம் விவாதிப்பதற்கு தயாராக இல்லாத சூழ்நிலையில் இதன் மீது அகில இந்திய அளவில் இணைந்த இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும் என நமது மாநில சங்கத்தின் சார்பாக அகில இந்திய சங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. மூன்றாண்டுகள் தொடர்ந்து லாபம் இல்லாத பொதுத் துறை நிறுவனங்களுக்கு சம்பளம் மாற்றம் தர இயலாது என்கிற DPE ன் வழிகாட்டுதலை முன்னிறுத்தி நிர்வாகம் சம்பளம் மாற்றத்திற்கு எந்தவிதமான இசைவும் தெரிவிக்காத பட்சத்தில், IDA neutralization செய்யலாம் என கூறி அது சம்பந்தமாக ஏற்கனவே நமது மாநில செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அகில இந்திய தலைமைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது நிர்வாகம் வலியுறுத்துகிற 0% என்பதும் IDA Neutralization என்பதும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆனால் 0 % fitment ல் நிர்வாகத்திற்கு செலவுகள் வரக்கூடிய சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.இதனால் ஊழியர்களுக்கு பொருளாதார ரீதியாக பெரிய அளவில் லாபம் இல்லை. Stagnation சரிசெய்ய இது உதவுமென கருத்து நிலவுகிறது. ஒரு சில தோழர்களுக்கு 0 % fitment ல் ஊதிய இழப்பும் ஏற்படுகிறது.எனவே அகில இந்திய தலைமை ஊழியர்களின் உணர்வுகளை கணக்கில் கொண்டு நல்ல முறையில் முடிவுகளை எடுத்திட வேண்டுமென்று செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
- Works committee மாவட்டங்களில் உடனடியாக அமைத்திடவும் அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் மாநில நிர்வாகத்திடம் அதை பேசலாம் எனவும் செயற்குழு முடிவு செய்கிறது.
- Online attendance இதில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் நிலவிய பிரச்சனைகளையும், Transmission பகுதியில் பணிக்கு செல்வோருக்கு நிலவிய பிரச்சனைகளையும் மாநில சங்கம் மாநில நிர்வாகத்தோடு பேசி சரி செய்து கொடுத்திருக்கிறது. காவலர் பணியில் இருப்பவர்களுக்கு இன்னமும் இதில் பிரச்சனை நீடிக்கிறது. இதன் மீது துரித நடவடிக்கை எடுத்திட இம்மாநிலச் செயற்குழு முடிவு செய்கிறது.
- பல மாவட்டங்களில் கொரோனாவிற்கு பிறகு IQ சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதை ஏற்கனவே மாவட்ட நிர்வாகங்களின் கவனத்திற்கும் , மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கிற சூழலில், உடனடியாக அதன் மீது கவனம் செலுத்தி பயன்பாட்டிற்கு உகந்ததாக சீரமைத்து சரி செய்து தர வேண்டுமென மாநிலச் செயற்குழு வேண்டுகிறது.
- மாவட்டச் செயலர்கள் தங்கள் மாவட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை தொகுத்து கடிதமாக மாவட்ட நிர்வாகத்திற்கு 15.01.2023 ஆம் தேதிக்குள் கொடுத்து அதனை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பிட வேண்டுமெனவும்,மாநில நிர்வாகத்துடன் அந்தப் பிரச்சினைகளை விவாதித்து தேவைகளின் அடிப்படையில் மாநில நிர்வாகத்தின் தலையீட்டை கோரி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாமென இச்செயற்குழு முடிவு செய்கிறது.
- JTO போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சிக்காக காத்திருந்த பல தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் பயிற்சி வகுப்பு காசியாபாத்தில் வழங்குவது என்று முடிவெடுத்து கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டிருந்தது. தோழர்கள் பலரும் தமிழகத்தில் தங்களுக்கு பயிற்சி அளித்திட வேண்டுமெனவும் வெகு தூரம் செல்வதால் நிர்வாகத்திற்கு பயணப்படி கொடுக்கும் நிதிச் சுமை அதிகமாகும் என்பதையும் சுட்டிக்காட்டி சென்னை RGM TTC ல் பயிற்சி அளித்திட வேண்டுமென கோரினர்.மாநிலச் சங்கம் மாநில நிர்வாகத்திடமும், அகில இந்திய சங்கத்திடமும் தோழர்களின் கோரிக்கைகளை முன் வைத்து பேசியது. நமது வேண்டுகோளை ஏற்று போர்க்கால அடிப்படையில் மூன்றே தினங்களில் பயிற்சியை அந்தந்த பகுதியிலேயே, குறிப்பாக சென்னையில் RGM TTC ல் வழங்கிட ஏற்பாடு செய்த அகில இந்திய சங்கத்திற்கும், எந்தவித மறுப்பும் இன்றி உடனடியாக பயிற்சி அளித்திட ஒப்புதல் அளித்த மாநில நிர்வாகத்திற்கும், RGM TTC நிர்வாகத்திற்கும் மாநில செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.