JE தோழர்கள் Rule-8 மாற்றல் NFTE தமிழ் மாநிலச் சங்கம் – CGM சந்திப்பு

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

DR JE தோழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. NFTE-BSNL தமிழ் மாநில சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாகவும் தற்போதய மாநில நிர்வாகத்தின் மனிதாபிமான அணுகுமுறையின் காரணமாகவும் Rule 8 Transfer தருவதற்கான முயற்சி விரைந்து எடுக்கப்பட்டு வருகிறது.

DR JE தோழர்கள் பலரும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் பணி நியமனம் பெற்று சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதில் பலரும் நமது சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தோழர்கள் தங்கள் சொந்த ஊருக்கு போக வேண்டும் என்கிற விருப்பத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லி இருக்கிறார்கள். 2022 ஜனவரி மாதம் திருச்சி SSA கீரனூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தங்களுக்கு மாற்றல் பெற்றுத்தர வேண்டும் என்கிற கோரிக்கையை வலுவாக தோழர்கள் எழுப்பினார்கள். பணி ஒரு பெரும் சுமையாக அந்த தோழர்களுக்கு தெரியவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் குடும்பத்தாரை விட்டு பிரிந்து வந்து வெகு தூரத்தில் இருப்பது அவர்களை உளவியல் ரீதியாக பாதித்துள்ளது. ஆகவே அவர்கள் ஐந்தாண்டு சேவை முடித்துவிட்டு இருக்கிறோம், நிரந்தரமாக எங்களது விருப்பமாற்றலை பெற்றுத் தர வேண்டும் என அகில இந்திய செயலாளர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். நாமும் தமிழ் மாநில சங்கத்தின் மூலமாக பத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் தோழியர்களுக்கு Transfer பெற்று தந்திருந்த சூழ்நிலையில் அனைவரும் தங்களுக்கு அதுபோல மாற்றல் வேண்டுமென கோரிக்கையை மீண்டும் தேர்தல் பிரச்சார துவக்க விழா கடலூரில் நடைபெற்ற போது கோரினர்.
அவர்களுக்கான மாற்றலை பெற்று தருவதற்கு மாவட்ட நிர்வாகங்களோடு நமது மாவட்ட செயலர்களும், மாநில நிர்வாகத்துடன் நமது மாநில சங்கமும் தொடர்ந்து பேசி வந்த சூழ்நிலையில் தற்பொழுது அவர்கள் பணிபுரியும் இடங்களில் சேவை பாதிப்படையாத வகையில் அவர்களை அந்த பகுதியில் இருந்து விடுவித்து Trasfer ல் அனுப்புவது குறித்து மாநில நிர்வாகம் காரியார்த்தமாக யோசித்து வருகிறது.

1.11.2022 அன்று மாநிலச் செயலாளர் நடராஜன் CGM அவர்களை சந்தித்து DR JE Rule 8 மாற்றல்கள் குறித்து உறுதிப்படுத்தினார்.

  • கும்பகோணம் போராட்டம் குறித்து CGM அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளார். மாவட்ட அளவில் இதன் மீது பேச்சுவார்த்தை நடத்தி சமூகமான தீர்வு எட்டப்படாவிட்டால் மாநில நிர்வாகம் தலையிடும் என்கிற உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.
  • கடலூரில் non executive ஊழியர்கள் மாற்றல் பற்றி நிர்வாகம் பேசுகிறது. ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட முறை மாற்றல் போடப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் ஒரு மாற்றல் தேவையில்லை என்பது மாவட்ட சங்கத்தின் நிலைப்பாடு. இதனையும் CGM அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம்.மாவட்ட அளவில் GM அவர்களுடன் விவாதித்து சமூகமான முடிவை எட்டிட வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.
  • Transmission பகுதியில் பணியாற்றும் தோழர்களுக்கு attendance போடுவதற்கு APP உருவாக்கி தரப்படும் என மாநில நிர்வாகம் கூறியிருந்தது. வேலூர் தோழர்கள் தற்பொழுது இந்த App ஐ தங்களால் access செய்ய முடியவில்லை எனக் கூறியதை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது.
  • தஞ்சை மாவட்டம் தோழர் அம்மாபேட்டை சண்முகம் அவர்களுடைய qualifying services ஐ கணக்கில் கொண்டு அவருக்கான ex-gratia கணக்கிடப்பட்டு தரப்பட வேண்டும் என தொடர்ந்து மாநிலச் சங்கம் அகில இந்திய அளவில் பிரச்சினை எடுத்து தற்போது மாவட்ட அளவில் process ல் உள்ளது. மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதலை மாவட்ட நிர்வாகம் கோரியுள்ளது. விரைந்து அதற்கான வழிகாட்டுதல் தரப்பட்டு ex-gratia வழங்கப்படும்.

DR JE களின் சிரமங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கான RULE 8 மாற்றல் தருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளும் மாநில நிர்வாகத்திற்கு நன்றி.

தோழமையுடன்,
K.Natarajan,
CS,NFTE-BSNL,
TN Circle,
Chennai,
2.11.2022.