மாநில செயலர் கூட்ட முடிவுகள்

மாநில செயலர் கூட்ட முடிவுகள்

மாநில செயலர் கூட்டம் டெல்லியில்  அன்று துவங்கி இரு நாடகள் நடைபெற்றது. 24 மாநில செயலர்கள் பங்கேற்றனர்.

மாநில அளவில் ,அ.இ.அளவில் பொது சமூக ஊடகங்கள் முறைபடுத்துதல் குறித்து விவாதிக்க பட்டது .மாநில அளவில் சமூகஊடகங்கள்.மாநில செயலர் அல்லது அவர் ஒப்புதலுடன் நிர்வகிக்கவேண்டும். மற்ற மாநில வாட்ஸ் ஆப் ஏதுவும் மற்ற மாநில நிர்வாகிகள் பதிவு செய்யகூடாது . அ.இ.அளவிலும் செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என முடிவு செய்யபட்டது.

பல மாநிலங்களில் கவுன்சில் கூட்டம் கூடுவதில் உள்ள சிரமங்கள், ஒன்றுபட்ட பிரச்சனை பட்டியல் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்த்ப்பட்டது.

நிறுவனம் புத்தாக்கம் குறித்து விவாதிக்க பட்டது. 4ஜி அலைவரிசை 3ஜி டவர் மேம்படுத்தல், உள்ளிட்டவை விவாதிக்கபட்டது. மேலும் ஊதிய மாற்றம், கிராக்கிப்படி ஊதியத்துடன் இணைத்தல்,, புதிய பதவிஉயர்வு திட்டம் குறித்து மத்திய சங்கம் கோரிக்கை உருவாக்கும்.

கிராக்கிபடி அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டி (தமிழகம் ) மாநில சங்க குறிப்பை மத்திய சங்கம்  IDA வை DAPay ஆக கருதிட உறுதியான நடவடிக்கை  எடுக்கபடும்.

பொது செயலர் மீது பொய்யான, அவதூறு செய்தி பொது வெளியில் , ஊடகங்களில்  வெளியிட்ட தமிழ்நாடு உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட  தீர்மானம் ஏற்கப்பட்டது.

தலைவர், பொது செயலர் தொகுப்புரைக்கு பின்னர் கூட்டம் முடிவுற்றது.