பழனியாண்டி ஊதியம்

பழனியாண்டி ஊதியம்
பட்டுவாடா குறித்து திரு, ராமேஷ், கணக்கதிகாரி அவர்களிட இன்று விரிவாக விவாதிக்கபட்டது. அவர் பழனியாண்டி நிலுவைக்கான நிதியை சிறப்பு கோரலாக கார்பரேட் அலுவலகம் , வரும் 2 ம்தேதி பொது செலவுக்கான மாதந்திர நிதி கோரலுடன் அனுப்பி, நேரிடையாக நிர்வாகத்திடம் பேசி நிதி பெற ஆவண செய்யப்படும் என உறுதியளித்துள்ளார். திருச்சி அலுவலக கணக்கதிகாரிகளுடனும் நேரிடையாக தோழர் முரளி அழைத்து பேசி ஆவண செய்துள்ளார்.தோழர் மனோஜ் கணக்கு அதிகாரி பட்ஜெட் மூலமாக இந்த நிதி கோரல் செய்யப்பட உள்ளது. சென்னை CAO Cash &drawal திரு சீனிவாசராகவன் தலைமை பொது மேலாளர் அலுவலக ஊழியர்களின் பிரச்சனையை கையாளுபவர் , அவரிடம் தெரியாத பிரச்சனை குறித்து விவாதித்து மேதாவிதனம் நாம் காட்டுவதில்லை. நம்முடைய செய்தி நேர்மையான செய்தி மண்டபத்தில் கவிதை எழுதி வாங்கி பரிசுக்கு பரபரக்கும் கூட்டம் நாம் அல்ல. மாறாக தொடர்ந்து இந்த பிரச்சனையை தீர்வு செய்திட, குடும்பத்தினரின் வலி அறிந்து, அந்த வலியை சுமந்து செயல் படுகிறோம். தீர்வு பெறும் வரை ஓயமாட்டோம்