மனித வள இயக்குனர் உடன் நடந்த கூட்ட தொடர்ச்சி 24/08/2021

18/08/2021 அன்று மனித வள இயக்குனர் உடன் நடந்த கூட்ட தொடர்ச்சி 24/08/2021 அன்று நடைபெற்றது

 • கோவிட்19 பாதிப்புக்கான ஊழியர் தரப்பு நிதிக்கு சமமாக நிர்வாகம் விரைவில் வெளியிடவேண்டும்.நிர்வாகம் விரைவில் அனைத்து சங்கங்களை கலந்து இறுதிசெய்வதாக கூறியுள்ளது.கொரானா காலத்தில் நிர்வாகம் ஊழியர் நலன் சார்ந்த எந்த உதவியும் செய்ய வில்லை என சுட்டி காட்டப்பட்டது. விடுப்பு சம்பந்தமாக உள்துறை வழிகாட்டுதல் அமுல்படுத்தபடும்.
 • குடியிறுப்புகளின் வாடகை மிக அதிகமாக உயர்த்தபட்டதால் ஊழியர்கள்  ஓய்வூதியர்கள் பாதிக்கபட்டு வெளியேறிவருகின்றனர். இதனால் நிறுவனம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மறு பரிசீலனை செய்ய கோரப்பட்டுள்ளது.
 • மருத்துவ இன்சுரன்ஸ் திட்டம் ஏற்கபட்டு விட்டது.
 • வங்கிகடன் குறித்து வங்கிகள் ஒப்பந்தம் நீட்டிக்க வேண்டும் மேலும் பிடித்தம் செய்யப்பட்ட தவணைகள் வங்கிக்கு செலுத்த வலியுறுத்தபட்டது.
 • பிடித்தம் செய்யபட்ட கிராக்கிபடி நிலுவை ரூ 58 கோடி வழங்க கோரப்பட்டது. எனவே நிர்வாகம் வழங்கிட சாதகமாக பரிசீலித்து வருகிறது.
 • ஊழியர்களின் FTTH இணைப்புக்கு தள்ளுபடி வழங்க வேண்டும் என்ற நமது சங்க கோரிக்கை ஏற்கபட்டு உத்திரவு வெளியிடபட்டது.
 • பாரபட்ச NEPPபதவி உயர்வு காரணமாக பல்வேறு பாரபட்சம், தேக்கநிலை,குளறுபடிகள் உள்ளன. எனவே புதிய பதவி உயர்வு திட்டம் பரிசீலிக்க தகுந்த நேரம் என கூறப்பட்டது. நிர்வாகம் ஒருதிட்ட முன் மொழிவுடன் கோரிக்கையை முன் வைக்க கோரி உள்ளது.
 • கோவிட் மறைவு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு பரிவு அடிபடை பணி கோரிக்கை மறுக்கப்பட்டது.
 • அனைத்து அரசு/பொதுதுறைகள் நமது சேவையை பயன் படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 • ஊழியர் சீரமைப்பு பெயரில் அளவீடுகல் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. Sr.TOA கேடர் ஒழிப்பு கூடாது. உள்ளிட்ட மாற்றங்கள் முன் வைக்கபட்டன. திட்டம் இறுதி செய்யும் முன் விவாதிக்க ஏற்கப்பட்டது.
 • நேரிடை ஊழியர்களின் ஓய்வூதிய பங்கு SABல் செலுத்திடவும், விருப்ப ஓய்விவில் சென்றவர்களுக்கும், மறைந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தபட்டது.

நன்றியுடன் கூட்டம் முடிவுற்றது