மாநில அளவிலான சேவை கருத்தரங்கம்

மாநில அளவிலான சேவை கருத்தரங்கம். மாநில செயற்குழு கூட்ட முடிவின படி 24/08/2021 அன்று  காலை 1100 மணிக்கு துவங்கிய  “சேவை மேம்பாடு, வருவாய் பெருக்கம், மற்றும் அதன் சவால்களும்” கருத்தரங்கம்  தோழர் ப.காமராஜ், மாநில தலைவர் தலைமையில் நடைபெற்றது.  தோழர் ஜி.எஸ்.முரளிதரன் வரவேற்புரை ஆற்றினார். மாநிலச்செயலர் கி.நடராஜன், நோக்க உரை ஆற்றினார்.பின்னர்  தோழர் காமாராஜ் கிளஸ்டர், FTTH, BTS, மொபைல் சேவை, உள்ளிட்ட பிரச்சனைகளை தொகுத்து முன் வைத்தார். வேலூர், சேலம்,குடந்தை மற்றும் இதர மாவட்ட தோழர்களின் கருத்துகளும் முன் வைக்கப்பட்டன.
CGM உரை:-BSNL  நிதி குறைவு காரணமாக பல்வேறு பில்கள் பட்டுவாடா செய்ய முடியாமல் இருப்பதால்  சேவைகுறைவை சரி செய்யமுடியவில்லை. தற்பொழுது மீண்டு வருகிறோம். தொலைதொடர்பின் வளர்ச்சி இன்றைய நிலைகுறித்து விவரித்தார். கொரானா காலத்தில் தனி நபர் தொடர்பு என்பது முற்றிலும் குறைந்து மொபைல் / டேட்டா  மட்டுமே தொடர்பு மீடியமாக இருந்தது. கிராமபுற சேவை தனியார் தருவதில்லை. நமது நிறுவனம் மட்டுமே சேவை வழங்கி வந்தோம். விருப்ப ஓய்வு பிந்திய காலத்தில் அவுட் சோர்சிங் தவிக்க முடியாது. மேலும் தனியார் நிறுவனங்கள் லாப பகிர்வு முறையில் புதிய மூலதன முறையை பயனபடுத்தி வருகிறது.                         அவுட்சோர்சிங் முறை மிக பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டுகிறது .எனவே அதன் பிரச்சனைகளும் கூடுதலாக உள்ளது. தீர்வு காணப்பட்டு வருகிறது.CFA/TRANSIMISSION/FTTH/CM/EB/CM OP/OTHER OP  ஆகிய 7 வியாபார தூண்கள் குறித்து உரையாட உள்ளேன். விருப்ப ஓய்வு திட்ட  பிந்தைய காலத்தில், 50% க்கு மேல் ஊழியர்கள் குறைந்து நிலையில் காண்டிராக்ட் முறை பணி பல்வேறு வடிவில் வந்துள்ளது. முதல் முறை என்பதால் நாம் அனைத்து விசயங்களையும் கணிக்க முடியவில்லை. கார்ப்பரேட் அலுவலகம் FMS வழியாக அனைத்து மாவட்டங்கள், காண்டிராக்ட் ஆகியோரின் சேவைகளை கண்காணித்து  தரவுகளை பரிசீலித்து சரி செய்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து குறைபாடுகளையும் களைந்து வருகிறது. ஒரு மணி நேரத்தில் பழுதுகள் நீக்க பட்ட பதிவுகள்  கூட சரியாக, உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.  ஊதியத்தியற்கான நிதியும் உடனே விடுவிக்கப்பட்டு வருகிறது.பழுதுகள் வெகுவாக குறைந்துள்ளது.    FTTH –தமிழ் நாடு இந்த வருடம் கூடுதலான இணைப்புகளை வழங்கி முன்னணியில் உள்ளது.130 OLT கொடுக்கபட்டதில் நாட்டில் முதல் இடத்தை பெற்றுள்ளது. சில மாவட்டங்களில் FTTH வழங்க சில தடைகள் உள்ளன. விருப்பபடும் LCO க்கு ஏரியா ஒதுக்காமல் எந்த இடத்திலும் இணைப்பு வழஙக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான போட்டி காரணமாக சென்ற ஆண்டு 18000 இணைப்பு .  LL இணைப்பில் வருவாய் இழப்பு இதன் மூலம் ஈடு செய்யபட்டு கூடுதலாக 8% வருவாய் பெற்று நாட்டடிலேயே முதன்மை இடத்தில் உள்ளோம். ரூ500க்கு குறைவான திட்டங்களை தவிர்த்து கூடுதல் வருவாய் திட்டங்கலை செயல் படுத்தியுள்ளோம். புதுச்சேர்யில் 17000 LL 13000 FTTH  ஒரு சில மாதங்களில் FTTH, LL  இணைப்புகளை விட கூடுதலாக இருக்கும் . இதனால் வருவாய் பெருக்கம் கூடும்.TRANSMISSION / CM OP  இரண்டும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது. ஊழியர் பற்றாக்குறை காரணமாக இந்த பிரிவுகள் முழு வீச்சில் நடை பெற முடியவில்லை. மாவட்ட அளவில் ஒரு டீம் என்பது பகுதி வாரியாக டீம் அமைக்க  கிளஸ்டர் பகுதியில் இருந்து ஊழியர்கள் பயன் படுத்தப்பட உள்ளனர். BBC –திட்டம் கிளஸ்டர் மேனேஜர் மூலமாக  FTTH வழங்க படும். இதற்கான தனித்த னொடல் NODAL அதிகாரி நியமிக்கபட்டு சேவைகள் துரிதமாக்கபடும்.CM SALES ,புராஜெக்ட் விஜய் போதுமான ஊழியர்கள்  TT/ SrTOA  கேடரிலிருந்து நியமிக்க படுவார்கள். BATTERY  பழுது இனம் கண்டறிந்து நீக்கபட்டு வருகின்றன. 400 பேட்டரி வர உள்ளது. விரைவில் பழுதான பேட்டரிகள் படிபடடியாக மாற்றப்படும். EB கூடுதலாக பல்வேறு அரசு திட்டங்களை செய்ல்படுத்தி வருகிறோம்மற்ற வியாபாரபகுதி மூலமாக  இடம் வாடகைக்கு விடுவது எனபது மிக முக்கியமான வருவாய் ஈட்டும் வழியாக உள்ளது. தேவையற்ற குடியுருப்புகள், கான்பர்ரன்ஸ் ஹால்,இடங்கள் அடையாளபடுத்த பட்டு வருகிறது. அதுபோல வீண் ,காலவதியான பொருட்களை ஏலம் நடத்திட தனி பிரிவு செயல் படுகிறது.  OLT விரிவாக்கத்தின் பொழுது BNG கூடுதலாக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலும் இது போல ஊழியர்களை ஊக்குவிக்கும் அளவில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்ய ஊழியர் தரப்பு கோரியது.  தோழர் சுப்பராயன் நனறியுரைக்கு பின் கருத்தரங்கம் நிறைவு பெற்றது .CGMமின் உரை சிறப்பாக , அனைத்து கேள்விகளுக்கும்  பதில் உரை நிகழ்த்தியதற்கு நன்றி பாராட்டப்பட்டது.இறுதியாக தனது கடுமையான வேலைக்கு இடையையும் மாநில தலைமை பொது மேலாளர் அவர்கள் நம் அழைப்பை ஏற்று கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றியதற்கு  மாநிலச் செயலர் நன்றி கூறிய போது கும்பகோணம் மற்றும் கடலூர் பகுதிகளில் FTTH பிரச்சனைகளில் தலையிட்டு தீர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.