இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லும் -தோழர் குப்தா

தோழர் குப்தாவின் நூற்றாண்டு விழா துவக்கம்’  சிலருக்கு  கலக்கம்.

தோழர் குப்தாவின் நூற்றாண்டு துவக்கவிழா நாடு முழுவதும், தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தோழர் குப்தாவின் எதிர் காலத்தை கணித்து பெற்று தந்த அரசு ஓய்வூதியத்தை  சுமார் 4 லட்சம் அதிகாரிகள், ஊழியர்கள் போற்றி பெற்று வருகின்றனர்.

அரசு ஓய்வூதியம் பெறமுடியாது, MTNL போல இரு ஓய்வூதியம் என கூறி மகத்தான  செப்/2000  வேலை நிறுத்தத்திற்க்கு எதிராக நின்று பணிசெய்வேன் என போராடிய அணிதலைவர் திரு ராமன் குட்டி தோழர் நூற்றாண்டு விழாவில் தோழர் குப்தாவை வசை பாடியுள்ளார்.

ஓய்வூதியர் சங்கத்தில் ஒரு பிளவை உருவாக்கிட, தோழர் குப்தா நேசிப்பவர்களை சிறுமை படுத்திடதொடர்ந்து எழுதி வருகிறார்.

தோழர் குப்தாவை எதிர்ப்பதை தவிர உருப்படியான தீர்வை என்றுமே எட்ட முடியாதவர்களின்  பேச்சு என ஒதுக்கிவிட முடியாது.

போனஸ், இருகட்ட பதவு ஊயர்வு எதிர்ப்பு பின் எனக்கு கொடுங்கள் என கோரிக்கை.

உண்ணிக்ருஷ்ணன் அமைசருக்கு விசுவாசம்,, பின்கருணையில் குடியிருப்பு இலவசம்.

தொழில் நுட்ப எதிர்ப்பு  SFT/SFK ஆதரவு, கேடர் சீரமைப்பு இல்லாவிட்டால் தந்தி முடுவிழா நடந்த பொழுது பலரும் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும் தோழர் குப்தாமுன் யோசனை காரணமாக தொலைபேசியுடன் இணைப்பு.

BSNL  எதிர்ப்பு விருப்பம் தராதே என அறைகூவல், அந்தரங்கத்தில் விருப்பம் உடனே கொடு என  அனைவருக்கும் தந்தி அனுப்பியவர் தான் திரு ராமன் குட்டி.

காலம் கடந்தாலும் பழைய தனித்து காட்டி கொள்வது( DEMARKATION) மாறாது தொடர்கிறது.

தோழர் குப்தா அபிமானம் படைத்த தோழர்கள், தலைவர்கள் இந்த கருத்தை  அந்த அமைப்பில் உறுதியாக,எதிர்த்து போராடுவார்கள்.

ஓய்வூதிய சங்க பொது செயலர் திரு ராமன் குட்டி கருத்தை ஏற்கிறாரா இல்லை மறுப்பு தெரிவிப்பாரா என எதிர்பார்க்கிறோம்.

தோழர் குப்தா தபால் தந்தியில் காலடி வைத்த காலத்தில் இருந்து சர்ச்சைகளை ச்ந்தித்து 60 ஆண்டு காலம் வாழ்ந்தவர். அவரது நூற்றாண்டில் சர்ச்சை இல்லாமல்  போனால் எப்படி ? சர்ச்சை வந்தால் தோழர் பெருமைகளை பட்டியலிட பயன்படுத்துவோம்.

நூற்றாண்டில் இமயத்தின் சாதனைகளை கூறுவோம். மனித நேயம்,, அளவற்ற சகிப்பு தன்மை, ஒற்றுமை, போராட்ட குணம், தீர்வுடன் ஒப்பந்தம்,நிறுவனம் காக்க ,ஊழியர் நலன் காக்க அல்லும் பகலும் உழைத்திட்ட தானை தலைவன்,ஓய்வூதிய நாயகன் புகழ் தன்னை உயர்த்தி பிடிப்போம். இழிவு செய்ய நினைத்தால் அறம் காக்க எழுவோம்..