மாநில செயற்குழு

தமிழ் மாநில செயற்குழு –19—01–2021

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

கடலூரில் 19-1-2021அன்று நடைபெற்ற மாநில செயற்குழு சம்மேளன  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சம்மேளன கொடியை தோழர் சுப்பிரமணியம் அவர்கள் ஏற்றி வைத்தார்கள் .

தோழர் விநாயகமூர்த்தி முழக்கம் எழுப்பினார்கள்.

தோழர் காமராஜ் மாநில தலைவர் அவர்களின் தலைமையில் தொடங்கிய செயற்குழுவிற்கு வந்திருந்த அனைவரையும் மாநில சங்கத்தின் சார்பாக தோழர் P.பாலமுருகன் மாநில அமைப்பு செயலாளர் அவர்களும் மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர் D. குழந்தைநாதன் மாவட்ட செயலாளர் அவர்களும் வரவேற்றார்கள்.

மாநில உதவி செயலாளர் தோழர் சுந்தரமூர்த்தி அவர்கள் அஞ்சலி உரையாற்றினார்கள்.

சம்மேளனத்துணைத் தலைவர் தோழர் பழனியப்பன் அவர்கள் துவக்க உரை ஆற்றினார்கள்.

ஞானையா நூற்றாண்டு துவக்க நிகழ்ச்சியாக மூத்த தோழர் கடலூர் ரகு அவர்கள் உரையாற்றினார்கள்.

மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் பாண்டிச்சேரி அசோகராஜன் அவர்கள் எழுதிய” 1990  வேலைநிறுத்தப் போராட்டம் – ஓர் மீள்பார்வை” 

என்ற நூலை தோழர் ஜெயராமன் முன்னாள் சம்மேளனச்செயலர் அவர்கள் வெளியிடவும் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் தமிழ்மணி அவர்கள் பெற்றுக் கொள்ளவும் நூலை அறிமுகப்படுத்தி தோழர் ஜெயராமன் அவர்கள் பேசினார்கள்.

60 நாட்களாக டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்த விவரங்களை தோழர் மாரி அவர்கள் விளக்கினார்கள். போராட்டத்திற்கு நேரடியாக ஹரியானா எல்லைக்கு சென்று  போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய வேலூர் மாவட்ட செயலர் தோழர் அல்லிராஜா,   அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.

 ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநிலச் செயலர் தோழர் செல்வம் அவர்கள் ஒப்பந்த ஊழியர்களின் வழக்கு சம்பந்தமான தற்போதைய நிலையை விளக்கிக் கூறினார்கள்.

ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி மாநிலச் செயலாளர் தோழர் நடராஜன் அவர்கள் பேசினார்கள்.

விவாதத்தில் மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் தங்களது கருத்தை தெளிவாக பதிவு செய்தார்கள்.

அனைவரது கருத்துக்கு பின்னால் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1)  ஊழியர்களின் ஊதியப்பட்டுவாடாவை அந்தந்த மாத இறுதி நாட்களில் உறுதிப்படுத்திட வேண்டுமென மத்திய சங்கத்தை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. 

2) தோழர் ஞானையா நூற்றாண்டு விழா மாவட்டங்கள் தோறும் நடத்திட வேண்டும் என மாநிலச் செயற்குழு முடிவு செய்கிறது. மாநிலச் சங்கம் சார்பாக ஒரு மையத்தில் நடத்திடவும் திட்டமிட வேண்டும். வரும் 31ம் தேதி கோவையில் நடைபெறும் நூற்றாண்டு விழா சிறக்க பங்கேற்க வேண்டும்.

3) விவசாய நலன்களை புதைக்கும் பாதக வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாம் இயக்கங்களை நடத்தியிருக்கிறோம். தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்க  மாநில செயற்குழு தீர்மானிக்கிறது. 

 4) மாநில மாநாடு மார்ச் முதல் வாரத்தில் நடத்திட முடிவு செய்யபட்டது. மாவட்ட செயலர்கள், மாநில சங்க நிர்வாகிகள் நிர்ணயிக்கப்பட்ட நிதியை பிப்ரவரி இறுதிக்குள் செலுத்திட வேண்டுகிறோம். மாவட்ட வாரியாக வாக்குக்கள் எண்ணிக்கை  அறிவிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. மாவட்ட சங்கங்கள் கிளை மாநாடுகளை நடத்தி கிளை வாரியான வாக்கு மதிப்பு கணக்கிட்டு பிப் இறுதிக்குள் மாநில சங்கத்திற்க்கு திரிவிக்க வேண்டும்.இதுவரைநிதி கொடுத்திருக்கிற தோழர்களுக்கு மாநிலச்  செயற்குழுவின் நன்றிகள்.

5) டெலிகாம் சொசைட்டியின் முறைகேடுகளுக்கு எதிராகவும், நமது ஊழியர்களுக்கு  சேரவேண்டிய தொகையை பெற்றுத் தந்திடவும், நீதி மன்ற வழக்கு தொடர்ந்திருக்கும் மாநில சங்க முடிவை வரவேற்றும் அதற்கான நிதியை மாநில சங்கம் செலவிட இச் செயற்குழு ஒப்புதல் அளிக்கிறது.  மேலும் வழக்கு நிதி கோரி மாநிலச் சங்கம் விடுத்துள்ள அறைகூவலை ஏற்றுமாவட்ட சங்கங்கள் நிதியளித்து உதவிட வேண்டுமென இம் மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

6)கிளை , மாவட்ட மாநாடுகளை மாநில மாநாட்டுக்கு முன் நடத்திட மாநில செயற்குழு முடிவு செய்கிறது.

 7) சேவை மேம்பாடு, பழுது நீக்கம், FTTH முறைகேடு குறித்து இரண்டு கட்ட போராட்டத்தை நடத்திடவும்,மாவட்ட அளவில் சேவை கருத்தரங்கம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு / தர்ணாப் போராட்டம் நடத்திடவும், மாநில அலுவலம் முன் ஒரு நாள் பட்டினிப் போர்  நடத்திடவும் இம்மாநிலச் செயற்குழு முடிவு செய்கிறது. 

8) பல ஆண்டுகள் பெற்று வந்த தற்பொழுது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்ட  போனஸ்,மருத்துவ படி, LTC போன்றவற்றை மீண்டும் ஊழியர்களுக்கும் பெற்று தந்திட அகில இந்திய சங்கம் முன்கை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

9) எங்கெல்ஸ் 200 வது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

10) தோழர் குப்தா நூற்றாண்டினை முன்னிட்டு அவரது உருவச்சிலை மற்றும் ஜெகன் சிலையை மாநிலச் சங்க அலுவலகத்தில் நிறுவுவது என மாநிலச் செயற்குழு தீர்மானிக்கிறது.

11) வரும் ஜனவரி 26 அன்று விவசாயிகள் நடத்தும்  பேரணியில் மாவட்ட மையங்களில் நமது சங்கத் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

12) மாநிலச் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று  மிக குறுகிய காலத்தில் 

மாநிலச் செயற்குழுவை   மிகச் செம்மையாக, சிறப்பாக நடத்திக் கொடுத்த கடலூர் மாவட்டச் சங்கத்திற்கும், தோழர் ஸ்ரீதர் அவர்களுக்கும் மாநிலச் சங்கம் நன்றியை பதிவு செய்கிறது.