மாநில செயற்குழு முடிவுகள்

மாநில செயற்குழு முடிவுகள்

மாநில செயற்குழு இன்று 9.12.2020 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7.30  மணி வரையில் மாநில தலைவர் தோழர் காமராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

செயற்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1. மாநில மாநாட்டை பிப்ரவரி 2021 க்குள் திருச்சியில் சார்பாளர் மாநாடாக நடத்தலாம் எனவும், சார்பாளர்கள் எண்ணிக்கை குறித்து மாவட்ட செயலர்கள் விவரத்தோடு அடுத்த மாநில செயற்குழுவிற்கு வரவேண்டும் எனவும் மாநில மாநாட்டிற்கு நிர்ணயம் செய்கிற நிதியை மாவட்டங்கள் தர வேண்டுமெனவும் இந்த செயற்குழு முடிவு செய்கிறது.விருப்ப ஓய்வு பெற்றவர்களிடம் ஒலிக்கதிர் நிதி, மாநில மாநாட்டு நிதி வரும் 8% கருணைத்தொகை பட்டுவாடவின் பொழுது வசூல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

2. Lcm மற்றும் works committee மாவட்டங்களில் உடனடியாக அமைத்திட மாநில நிர்வாகம் அதற்கான வழி காட்டுதலை மாவட்ட நிர்வாகங்களுக்கு விரைந்து வழங்கிட வேண்டுமென இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

3. Customer service centre outsourcing விட்டதற்கு பின்னால் அந்த பகுதியில் நிரந்தர ஊழியர்கள் check or DD வாங்குவதற்காக மட்டுமே பணி அமர்த்தப்படுகிறார்கள். உடனடியாக மாநில நிர்வாகம் இந்த சேவையை francisee யே வசூல் செய்யும் வகையில் ஏற்பாடு செய்திட வேண்டும். நமது நிரந்தர ஊழியர்கள் வேறு இடங்களுக்கு பயன் உள்ள வகையில் பயன்படுத்தப்பட வேண்டுமென இச்செயற்குழு வேண்டுகிறது.

4. கொரோனா பாதிப்பு கடுமையாக இருக்கிற இந்த நேரத்தில் மருத்துவ பில்கள் எதுவும் முறையாக காலத்தே கிடைக்காத சூழ்நிலையில் பிஎஸ்என்எல் ஊழியர் களுக்கு மருத்துவ பாலிசி ஒன்றை ஏற்பாடு செய்து பெற்று தந்திட வேண்டும் என அகில இந்திய சங்கத்தை இந்த மாநில செயற்குழு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

5. 8% ex gratia பட்டுவாடா வில் தாமதம் போக்கிட மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறது. தேவையான விவரங்களை  மாவட்ட நிர்வாகம் விரைந்து கொடுத்திட வேண்டுமென மாநில நிர்வாகத்தை நடவடிக்கை எடுத்திட இந்த மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

5.சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் விஷயத்தில் நாம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக அறிக்கை வெளியிட வேண்டும் என இந்த செயற்குழு முடிவு செய்கிறது.

6. கிளஸ்டர் மற்றும் FTTH பிரச்சினைகள் குறித்து GM

அவர்களிடம் பேசியதற்கு பின்னால் போராட்டம் குறித்த முடிவை எடுக்கலாமெனவும் போராட்டத்தை ஜனவரி மாதத்தில் திட்டமிடலாம் எனவும் இந்த செயற்குழு முடிவு செய்கிறது.

7. அமைப்பு ரீதியாக வர்த்தகப் பகுதி இணைப்பு மற்றும் குடியிருப்புகளுக்கு வாடகை குறைப்பது சம்பந்தமாகவும் அகில இந்திய சங்கத்திற்கு மாநில சங்கம் கடிதம் எழுதிட வேண்டும் என இந்த செயற்குழு முடிவு செய்கிறது.

8. சாதிச்சான்றிதழ் பிரச்சினை காரணமாக ஓய்வுகால பலன்கள் பெறாமல் சிரமப்பட்டு வருகிற தோழர்களின் பிரச்சினை குறித்து அகில இந்திய சங்கத்திடம் விவாதிக்கவும் வரைந்து பெறவும் நடவடிக்கை எடுக்கவும் அகில இந்திய சங்கத்திற்கு கடிதம் எழுதிட  இந்த மாநில செயற்குழு முடிவு செய்கிறது.

9. LICE EXAM மற்றும் கருணை அடிப்படையிலான வேலைக்கு அகில இந்திய சங்கத்தை முன்கை எடுக்க கோரியும் விரைவு படித்திட கோரியும் கடிதம் எழுதுவது.

10.கடலூர் தோழர்களுக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்டு இருக்கிற dies non குறித்து தொடர்ந்து பேசுவது சரி செய்வதற்கான ஏற்பாட்டை செய்வது.

12. சொசைட்டி பிரச்சனையில் மற்ற சங்கங்களுடன்இணைந்து நீதிமன்ற வழக்கு தொடுக்கவும், வழக்குசெலவை மாநில சங்கம் ஏற்கவும், மாநில செயலர் அனைத்து வித முடிவுகளை எடுத்து செயல்படவும் இச்செயற்குழு அதிகாரம் அளிக்கிறது.

13.அடுத்த செயற்குழு நேரடியாக நடத்துவதற்கு திட்டமிடுவது எந்த மாவட்டத்தில் நடத்துவது என்பதை ஓரிரு தினங்களில் அறிவிப்பது

14.திருநெல்வேலி வர்த்தக பகுதி உருவாக்கத்திற்கு பின்னால் திருநெல்வேலியை தலைமையகமாகக் கொண்டு செயல்படவேண்டுமென கார்ப்பரேட் அலுவலக உத்தரவை முறையாக மதித்து அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் மாநில நிர்வாகத்தை வலியுறுத்துவது அகில இந்திய சங்கத்திடம் இதுகுறித்து பேசி சரி செய்வது என இந்த செயற்குழு முடிவு செய்கிறது. AUAB மாநில அமைப்பின் மூலமாகவும் இந்த பிரச்சினையை  நிர்வாகத்திடம் பேசுவது என இச்செயற்குழு முடிவு செய்கிறது.

15.ஜெகன் கலை இலக்கிய மன்றம் சார்பாக அதனுடைய ஒருங்கிணைப்பாளர் தோழர் விஜய் அவர்கள் செய்துவரும் பணியையும், மாநிலச் சங்கத்திற்கு உறுதுணையாக போஸ்டர் /நோட்டீஸ் போன்றவற்றில் உதவி செய்து கொண்டிருக்கக் கூடிய விருதுநகர் ரமேஷ் அவர்களுக்கும் மாநிலச் சங்கம் மனதார பாராட்டுதலைப் பதிவு செய்கிறது.

16. குறிப்பாக கும்பகோணம் மாவட்டத்தில் மாவட்ட செயலர் தோழர் விஜய் மீது தேவையில்லாமல் FTTH பிரச்சனை , FAKE MAIL ID பிரச்சனை    என தவறான புகாரை எழுதுகிற அதிகாரி சங்கத்தின் மாநிலச் செயலாளர் அவர்களிடம் பேசுவது சரி செய்வது சரியான புரிதலை உருவாக்குவதற்கான முயற்சியை எடுப்பது என்றும் இந்த செயற்குழு முடிவு செய்கிறது.

 17.அடுத்த செயற்குழு சேலத்தில் நடத்த வேண்டும் என நாம் வேண்டுகோள் வைத்ததை மாவட்ட செயலர் தோழர் பாலகுமாரன் பரிசீலித்து முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளார் நன்றி.

18.இந்த மாநில செயற்குழுவின் மிகச் சிறப்பாக நடத்திட முடிவுகள் எடுத்திட பல்வேறு வகையில் உதவி செய்திட மூத்த தோழர் சென்னகேசவன், அகிலஇந்திய பொறுப்பாளர்கள் தோழர்கள் பழனியப்பன் மற்றும் சிறப்பு அழைப்பாளர் தோழர் செம்மல்  மற்றும் மாநில தலைவர் தோழர் காமராஜ் மாநில உதவி செயலாளர் முரளிதரன் மற்றும் மாவட்ட செயலர்கள் அனைவருக்கும் அஞ்சலி உரையாற்றிய மரியாதைக்குரிய தோழர் ராபர்ட்ஸ் அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

தோழமையுடன் 

கே.நடராஜன்,

 மாநிலச் செயலர்.