தொலைதொடர்பு துறையில் இருநிறுவன நிலை நோக்கி……

தொலை தொடர்புதுறையில் இரு நிறுவன நிலை நோக்கி……  

தொலைத்தொடர்புதுறையில்BSNLநிறுவனம் 4ஜி அலைக்கற்றைபெறுவதில்அரசுபல்வேறுமுட்டுகட்டைகளை இட்டுவருகிறது. அரசின் சார்புநிலை குறித்து அனைவரும் அறிந்துள்ளனர். 4ஜி களத்தில் 3ஜி மட்டுமேகொண்டுBSNLமார்க்கட்பங்கு10.3 %MTNL0.29% கொண்டுள்ளது. ஜியோ35.03%,ஏர்டெல்27.9%,IDEA26.3%என5நிறுவனங்கள்களத்தில்உள்ளன.. ஜூன்18ல்IDEA43.54கோடி, ஏர்டெல்36.32கோடி, ஜியொ21.53கோடி இணைப்புகள்கொண்டிருந்தன. ஜூன் 20ல் இந்த நிலை மாறி ஜியோ39.73கோடி, ஏர்டெல்31.67கோடி IDEA30.52கோடி இணைப்புகளை கொண்டுள்ளன.

வருவாய் ஜியோ ரூ16557 கோடிலாபம் ரூ2520கோடி, ஏர்டெல்ரூ23938கோடிநட்டம்ரூ15933கோடி, IDEAரூ 10655 கோடி, நட்டம்ரூ25460கோடி., BSNLரூ20000கோடி கடனுடன் வருவாய் ரூ18000கோடி. வருவாய் பெற்றுள்ளது. நட்டம் வெகுவாக குறைக்கப்பட்டு ஒருசில ஆயிரம்.கோடியாகஇருக்கும். தமிழகத்தின் அரையாண்டு கணக்கில் நட்டம்ரூ170கோடி காட்டப்பட்டுள்ளது. சென்ற அரையாண்டு நட்டம் ரூ420கோடி .வருவாய்ரூ1400-1500 வரை வருகிறது. ஆணடு வருவாய் ரூ18000 முதல் ரூ20000 கோடிவரைஎதிர்பார்க்கப்படுகிறது.

பாண்டு மூலதனம் ரூ8500கோடி, இடவிற்பனை ரூ11500கோடி BSNL பெற்றால் விரிவாக்கம் மற்றும் கடன்குறைப்புக்கு உதவும் ..இதுமேலும் நமது செலவினத்தை குறைக்கலாம். தற்பொழுது வருடம் ரூ4400கோடி வங்கிகடனுக்குசெலவிடப்படுகிறது.

ஆனால் IDEAரூ96312கோடி, ஏர்டெல்ரூ1,17,655கோடி, ஜியொ ரூ1,53,000 கோடி கடன் கொண்டுள்ளன.அரசுகடன்களை வாராக்கடனாக தள்ளுபடிசெய்யலாம். ஆனால்BSNL க்குசெய்யுமா?

ஜியோ அரசுஆதரவு,, வியாபார தந்திரங்கள்,  மூலமாக பங்குகளின் விலையை உயர்த்தி 33% பங்குகளை விற்று ரூ 1.52டிரில்லியன் மூலதனம் பெற்றுள்ளது. முகநூல் நிருவனம் 10% பங்குகளை பெற்று பங்குதாரர் மட்டுமல்லாது முகநூல் சேவை முன்னுரிமை பெற்ற நிறுவனமாக எதிர்காலத்தில் ஜியோமாறும் பல்வேறு டேட்டாபயன்படுத்தும் ஆப் நிறுவனங்கள் இந்தபங்குகளைவாங்கியுள்ளன, இதுஎதிர்காலத்தில் ஜியோ மிகபெரிய தனிபெரும் நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திட திட்டமிடுகிறது.

AGR பிரச்னை காரணமாக ஏர்டெல் ரூ44000 கோடி, IDEA ரூ58000 கோடிசெலுத்திடவேண்டும். மேலும் வோடொபோன் ரூ 28000 கோடி மற்றும் வட்டி வருமான துறை செலுத்திட வேண்டும் நிலை உள்ளது. அரசு ஆதரவாக நின்று அவற்றிற்கு 20 வருடதவணை வழங்கியுள்ளது. இல்லையென்றால்  நிறுவனங்களை மூடிவிடுவோம் எனஅரசுக்கு அச்சுறுத்தல் விடப்பட்டது. இந்ததொகை செலுத்திட இருநிறுவனங்களும் காலப்போக்கில் மூடிவிடநேரும் ஆகவே ஒன்று அல்லது இருநிறுவனம்மட்டுமே (அரசுநிறுவனம்அல்லாமல்) தொலைத்தொடர்பில் இருக்கும். கடும்கட்டணஉயர்வைசந்திக்கும்நிலைஉருவாகும். என ஊடகங்கள்தெரிவித்துள்ளன,அரசுநிறுவனம் தேவையில்லை என்ற சூழ்ச்சியானசெய்தி இதன்பின்னர்இருக்கிறது.

இந்த கடும் சூழ்நிலையிலும் அரசுநிறுவனம் BSNL மாதம்தோறும் புதிய இணைப்புகளை பெற்று வளர்ச்சி கண்டுள்ளது. 4ஜி பெறுவது என்பதே நமது.இலக்ககாக கொண்டு செயல்படுவோம். இரு நிறுவன நிலையல்ல BSNLலும் களத்தில் நின்று செயல்படும் என்பதை உணர்த்துவோம்.