அக்டோபர் 2000ல் BJP வாஜ்பாய் அரசால்
ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் பொதுத்துறை…
ஆண்டுகள் 20 ஆன நிலையில்…
அதே BJP மோடி அரசால் அழிக்கப்படும் அவலம்….
2016ல் ஆரம்பிக்கப்பட்ட அம்பானி நிறுவனத்துக்கு
4G வழங்கி.. 5Gயும் வழங்கத்துடிக்கும் அரசாங்கம்…
ஆண்டாண்டு காலமாக மக்கள் சேவை செய்யும்
அரசுத்துறை நிறுவனத்தை அழிக்கத்துடிக்கும் அநியாயம்…
உள்நாட்டில் 4G கருவிகள் உற்பத்தி செய்யும்
நிறுவனங்கள் இல்லாத நிலையில்
வெளிநாட்டு நிறுவனங்களிடம் கருவிகள் வாங்க
BSNL நிறுவனத்திற்கு அரசே தடை போடும் கொடுமை…
அனைத்து தனியார் நிறுவனங்களும்
அயல்நாட்டு கருவிகளைப் பயன்படுத்தும்போது…
அரசுத்துறையான BSNL மட்டும்
உள்நாட்டுக் கருவிகளை வாங்கி
உருப்படாமல் போக வேண்டுமா?
கண்களைப் பிடுங்கி ஓவியப்போட்டியா?
கைகளை உடைத்து கிரிக்கெட் போட்டியா?
கால்களை உடைத்து கால்பந்து போட்டியா?
இந்நிலை மாற்றிட…
அரசின் பாரபட்சக் கொள்கைகளை
மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டிட…
அக்டோபர் 1 BSNL உருவாக்க தினத்தை…
கறுப்பு தினமாகக் கடைப்பிடிப்போம்…
பொதுத்துறை உருவாக்க தினம் கறுப்பல்ல…
பொதுத்துறைகளை உருப்பட விடாமல் செய்யும்..
பொறுப்பற்ற அரசின் அணுகுமுறைக்கு எதிராகவே
அனைத்து சங்க கூட்டமைப்பின் கறுப்புதினம்…
தோழர்களே… உணர்வு கொள்வீர்…
BSNL காத்திட.. ஒற்றுமை காப்பீர்…