மாநில சங்க செய்திகள்,,,

மாநில சங்க செய்திகள்,,, 

  • விருப்ப ஓய்வில் சென்ற SC/ST ஊழியர்களின் விடுப்பு ஊதியத்தை நிறுத்திட விதிகளின் அடிப்படை ஏதுமில்லை. பணிநிறைவு பெற்ற இது மாதிரியான நிலை உள்ள ஊழியர்களுக்கு ஏற்கனவே விடுப்பு ஊதியம் வழங்கி, கிராஜுட்டி, கம்முட்டேசன் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்6ம் தேதி உத்திரவு வழக்கு,ச்ச்ச்ட் ஜாதி சான்றிதழ் பிரச்சனை உள்ளவர்களின் கருணைத்தொகை மட்டும் எவ்வளவு தொகை என கணக்கீடு கோரியுள்ளது. விடுப்பு ஊதியம் குறித்து ஏதும் கூறவில்லை. தமிழகத்தில் 13 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் 7, சேலம் 3, திருச்சி, என சில மாவட்டங்களில் உள்ளனர். அவர்கள் தலைமை பொது மேலாளருக்கு கடிதம் எழுதி விடுப்பு ஊதியத்தை கோர வேண்டும். மாவட்ட செயலர்கள் ஆவன செய்ய கோருகிறோம்
  • மாநில சங்கம் கிளஸ்டர் பழுது நீக்கத்தில் உள்ள குளறுபடிகள் குறித்து கடிதம் எழுதியுள்ளது. மாவட்ட சங்கங்களும் மாவட்ட மேலாளருடன் கடிதம் கொடுத்து விவாதித்து பிரச்சனை ஏதுமிருந்தால் தெரிவிக்கவும். மாநில சங்கம் இது குறித்து மாவட்ட செயலர்களுடன் விவாதித்து முடிவு செய்யப்படும்.
  • மாவட்ட சங்கங்கள் தல மட்டகுழு உறுப்பினர்கள் பெயர்களை மத்திய சங்கத்திற்கு அனுப்பிடவும் என மத்திய சங்கம் கோரியுள்ளது