திருநெல்வேலி தனி வியாபார பகுதியாக மாற்றம். விருதுநகர் மதுரையுடன் பகுதியுடன் இணைப்பு நமது கோரிக்கை தீர்வு

திருநெல்வேலி மாவட்டம் நாகர்கோயில் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு நாகர்கோயில் தலைமையிடமாக ஆக்கப்பட்ட்து. உறுப்பினர் சரிபார்ப்பு தேர்த்லில் நாம் திருநெல்வேலி தனி வியாபார பகுதியாக மாற்றிட முயற்சி மேற்கொள்வோம் என உறுதிபடகூறி மத்திய சங்கம் மூலம் பிரச்சனையை தீர்க்க கோரினோம். மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் விஜிலா ஆனந்த்  எழுப்பிய வினாவிற்கு தீர்வு கோரி அமைச்சகம் தமிழ்நாடு மாநில நிர்வாகத்திற்க்கு கடிதம் அனுப்பியது. விருதுநகர் தோழர்களும் மாநில செயற்குழுவில் தங்களை மதுரை பகுதி அருகாமையில் உள்ளதால் மதுரையுடன் இணைக்க கோரினர். மாநில சங்கம் தலைமை பொது மேலாளருடன் தனியாகவும் ,அனைத்து சங்க கூட்டத்திலும் விவாதித்தோம். மாநிலநிர்வாகம் ஏற்று கார்ப்பரேட் அலுவலக்த்திற்க்கு கடிதம் எழுதியது.  தஞ்சை மாநில செய்ரகுழுவில் கோரிக்கை விரைவில் தீரும் என  மாநில சங்கம் உறுதி கூறியது  தற்பொழுது திருநெல்வேலி, விருதுநகர் தோழர்களின் விருப்பத்தை , கோரிக்கை தீர்வு பெற்றுள்ளது. மாநில நிர்வாகத்திற்கும், பாராளுமன்ற உறுப்பினருக்கும், மத்திய சங்கத்திற்கும் நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மாநில சங்கம்.,,,,