SOCIETY STATUS 27/07/2020

தோழர்களே வணக்கம்.

இன்று நமது கூட்டமைப்பின் (BSNLEU, NFTE, AIBSNLEA,

SNEA )சார்பாக சொசைட்டி நிர்வாகத்தை சென்று சந்தித்தோம். சொசைட்டி செயலாளர் திரு பிரபாகரன் அவர்களிடம் ஒரு மாதத்திற்கு முன்பாக கடிதம் கொடுத்து அதற்கான பதிலை கோரியிருந்தோம்.                ஒரு மாத காலத்திற்கு பிறகும் கூட சொசைட்டி நிர்வாக தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை. எனவே அதன் மீது பதிலை அறிந்து தரக்கோரியும் , வெளிப்படைத் தன்மையோடு சொசைட்டி நிர்வாகத்தை இயக்கிட கோரியும் வருகிற 3.8.2020 அன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்கிற முடிவை சொசைட்டி நிர்வாகத்திற்கு இன்று 27.07.2020 கடிதம் மூலம் தெரிவித்து இருக்கிறோம்.

1.Fixed deposit refund December 2019 வரையிலும் ,

2. Death case settlement December 2018 வரையிலும்,

3. Superannuation settlement March 2019 வரையிலும்,

4. Voluntary closure refund September 2018 வரையிலும் அனுப்பியிருப்பதாக சொசைட்டி தரப்பில் செயலாளரால் கூறப்படுகிறது.

5. இதுவரையில் 2020 may முதல் 2020 July வரையில்  Tamilnadu circle விருந்து 8 கோடியே 53 லட்சமும், சென்னை தொலைபேசியில் இருந்து 10 கோடியே 23 லட்சமும் சொசைட்டி நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சங்கங்கள் தலையிடாமல் இருந்தால் அனைத்தையும் சொசைட்டி நிர்வாகம் செட்டில் செய்யும் என்றும் சங்கங்கள் தலையிடுவதால் தான் பிரச்சனை ஏற்படுகிறது என்பது போன்ற தவறான தகவல்களை ஊழியர் மத்தியிலும்,உறுப்பினர் மத்தியிலும் சொசைட்டி நிர்வாகம் பரப்புகிறது. இது சரியான அணுகுமுறையாக இல்லை என்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறோம். எனவே எடுத்த முடிவின்படி போரட்டத்திட்டம் செயல்படுத்தப்படும்.