BSNL சொத்து விற்பனை

BSNL / MTNL புத்தாக்கம் குறித்த 23/10/2019 அமைச்சரவை முடிவுக்கு பின் பிரதமர் அலுவலக முதன்மை ஆலோசகர் தலைமையிலான குழு நிறுவனங்களின் இடம்/சொத்துக்களை விற்க 17/01/2020 மற்றும் 03/07/2020 அன்று கூடியது.

கீழ்கண்ட முடிவுகள் எட்டப்பட்டன.

  1. மத்தியரசின் செலவின துறை 23/10/2019 அமைச்சரவை முடிவின் படி உடனடியாக  மீதமுள்ள கருணைத்தொகை மற்றும் பாண்ட் வெளியிட தேவையான அரசு உத்திரவாதம் வழங்கப்படவேண்டும்.
  2. BSNL / MTNL இணைப்புக்கு பங்குவிலக்கல் துறை MTNL மதிப்பை விட கடன் பொறுப்பு உள்ளது. உடனடி இணைப்பு BSNL நிறுவனத்தை , புத்தாக்கத்தை குலைத்துவிடும். எனவே MTNL கடன் பொறுப்பு சரி செய்தபின் இணைப்பை நடத்தலாம்.
  3. பங்கு விலக்கல் துறை, பெரு நகர வீட்டு  வீட்டு வசதி துறை இணந்து BSNL சொத்துக்களை விற்க மத்திய/மாநில அரசுகளின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுத்து வாடகை / லீசு விடுவதற்க்கு பதிலாக விற்பனை துரிதபடுத்திட வேன்டும்.
  4. DOT 3 மாதங்களில்  BSNL டவர் / பைபர் சொத்துக்களை விற்க பல்வேறு திட்டங்களை முன் வைத்திட வேண்டும்.
  5. பங்கு விலக்கல் துறை BSNL சொத்துக்களை BSNL நேரிடியாக விற்க மதிப்பின் உச்சவரம்பை விரைவில் அறிவிக்க வேண்டும்.

இந்த கூட்ட்த்தை தொடர்ந்து BSNL சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரு 20/07/2020 அன்று நடை பெற உள்ளது.

BSNL சொத்துக்களை விற்க போர்டுக்கு அனுமதி வழங்கியும், போர்டு மூலம் அரசு உத்திரவாதம்கூடிய பாண்ட் வெளியிட்டு நிதி திரட்ட ஒப்புதல் வழங்கிட தீர்மானங்கள் முன் மொழியபட்டுள்ளன்.

டவர் தனி நிறுவனம் செயல்பட் முடியாமல் நீதிமன்ற தடை இருப்பதால் BSNL க்கு சொந்தமான டவர்/ கண்ணடி இழை கேபிள்களை விற்றிட மாற்று திட்ட்த்தை முன் வைக்கிறது BSNL பகுதி, பகுதியாக விற்கப்பட திட்டமும் இந்த புத்தாக்க முன் வரைவில் மறைமுகமாக உள்ளது. மத்திய சங்கங்கள் இது குறித்து முழுமையாக பரிசீலித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்..