EXGRATTIA ?

கருணைத்தொகையின் அவலநிலை…

கருணைத்தொகை குறித்து நித்தம் நித்தம் பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன, தோழர் பட்டாபி இது குறித்து உரையாற்றும் பொழுது அரசு மாதம் 5% மட்டுமே செலவு செய்யலாம் என்ற நிபந்தனை குறித்து அச்சம் தெரிவித்து இருந்தார். அந்த அச்சம் உண்மையாகியுள்ளது.ஆனால் கார்ப்பரேட் அலுவலகம் முழு கருணைத்தொகையும் வழங்கப்படும் என உண்மையற்ற செய்தியை தெரிவித்து வந்துள்ளது. 32% கருணைத்தொகை வழங்கியது போக மீதம் ரூ9300 கோடி வழஙக வேண்டும். ஆனால் ரூ 3600 கோடி MTNL உட்பட DOT நேற்று வழஙகியுள்ளத்தாக CMD அதிகாரிகள்(SOURCE AIBSNLEA) சங்கத்திடம் அதிகாரபூர்வமாக கூறியுள்ளார். இது அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது, BSNL  க்கு ரூ3000 கோடி என்பது 22% கூட இல்லை. மேலும் பிடித்தம் உள்ள தோழர்களுக்கு கையில் ஏதும் மிஞ்சபோவதில்லை. ஆகவே அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிட போராய வேண்டிய நிலையில் உள்ளோம். ஊழியர்களின் ஊதியம் காலத்தில் இல்லை. பிடித்தம் செய்யபட்ட நிலுவைகள் செலுத்தப்படவில்லை. மருத்துவ வசதி இல்லை, கொரானா காலாத்தில் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. இன்சுரன்ஸும் இல்லை. ஆகவே போரடுவதை தவிர வேறு வழி இல்லை எனபதை மத்திய சங்கத்திற்க்கு தெரிய படுத்தியுள்ளோம்.