மாநில செயலர் செய்தி

தோழர்களே வணக்கம்.
இன்று 23.06.2020 மாநில தலைமை பொதுமேலாளர் அவர்களிடம் தொலைபேசியில் மாநிலச் செயலர் தொடர்பு கொண்டு பேசினார்.

  1. கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் FTTH ல் நிலவுகிற முறைகேடுகளை களையக்கோரி 19.06.2020 போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 18.06.2020 அன்று மாவட்ட பொது மேலாளர் மாவட்ட சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினையை விசாரித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதில் தலையிட்டு வழிகாட்டுதலை தந்த மாநில நிர்வாகத்திற்கு நன்றி சொல்லப் பட்டது.
  2. Outsourcing cluster கொடுக்கப்பட்டதில் அசீம் இணைப்புகள் நீக்கப்பட வேண்டும் எனவும் அது Virtual connectionஎன்பதால் அதற்கு பராமரிப்பு செலவு தர தேவையில்லையென என வலியுறுத்தியிருந்தோம். நேற்று 22.06.2020 நடைபெற்ற மாநில அளவிலான நிர்வாக தரப்பு video conference ல் பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Cluster Bill pass order போடும் போது அசீம்
    இணைப்பக்கான பராமரிப்பு செலவு குறைக்கப்படும்.மாவட்டச் செயலர்கள் இதில் கவனம் செலுத்தவும்.
  3. May 2020 salary க்கு இன்று மாநில நிர்வாகத்திலிருந்து மீண்டும் கார்ப்பரேட் அலுவலகத்துக்கு தொடர்பு கொள்ளவதாக கூறப்பட்டது.
  4. TVL BSNL கட்டிடம் வாடகை விடுவதில் மாநில நிர்வாகம் வழிகாட்டலை தரவேண்டுமெனவும்,TVL AUAB ன் கோரிக்கை பரிசீலக்கப்பட வேண்டுமெனவும் தமிழக AUAB சார்பில் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தோம். இன்று 23.06.2020 மீண்டும் மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதல் மற்றும் தலையீடு தேவையென கோரியதோடு TVL AUAB ன் கோரிக்கையை கணக்கில் கொண்டு முடிவுகள் எடுத்திட கேட்டுள்ளோம். இது வரையில் EOI ல் யாரும் வரவில்லை எனவும்,வந்த பின்னால் தான் எதையும் முடிவு செய்ய முடியும் என்பதுதான் நிர்வாகத்தின் புரிதலாக உள்ளது.

K.Natarajan,
CS, NFTE-BSNL,
TN Circle.