விடுப்பு ஊதியம் மறுப்பு நியாயம் அல்ல

விடுப்பு ஊதியம் மறுப்பு நியாயம் அல்ல

தமிழகத்தில் விருப்ப ஓய்வு திட்டம்2019 அடிப்படையில் ஓய்வு பெற்றவர்களின் விருப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல்வேறு வழக்குகள், இலாக்கா ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாக சுமார் 30 ஊழியர்களின் அனைத்து பட்டுவாடாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்க்கு முன்னரும் மேலும் பலருக்கு பட்டுவாடா நிறுத்திவைத்துள்ளது. மாவட்டங்களில் மாவட்ட செயலர்கள் அனைவரது விவரங்களை பெற்றால் தான் நாம் பிரச்சனயை கையாள முடியும். காவல்/நீதிமன்ற  வ்ழக்குகலள் ,இலாக்கா ஒழுங்கு நடவடிக்கைகள், ஜாதி சான்றிதழ் பிரச்சனைகள் என வகைப்படுத்த வேண்டும். விருப்ப ஓய்வு திட்டம் 2019 ல் மட்டும் ஜாதி சான்றிதழ் பிரச்சனை 7 பேருக்கும், இதற்கு முன்னர் சுமார் 50 தோழர்களுக்கு, முக்கியமாக சேலத்தில் அனாமதேய கடிதங்கள் மூலம் பிரச்சனை மிக மோசமாக ஆக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை மாநில கமிட்டி முன் உள்ளது.மிக காலதாமதமாக்கப்பட்டு வருகிறது. BSNL தமிழ் மாநில நிர்வாகமும் இந்த பிரச்சனையை கையாண்டு வருகிறது. விருப்ப ஓய்வு திட்டம் 2019 விளக்க கடிதம் தேதி 13/12/2019 முந்தைய 04/11/2019 உத்திரவை சுட்டி காட்டி விதி 7(II)  தனி நபர் வழக்கு காரணமாக விஜிலென்ஸ் ஒப்புதலை நிறுத்திவைத்திட கூறியுள்ளது. மேலே உள்ள இரு உத்திரவுகளும் GPF, விடுப்புசம்பளம் தற்காலிக ஓய்வூதியம், மாற்றல் கொடை,  ஆகியவை தற்காலிகமாக விதி எண் 69 அடிப்படையில் EXGRATATIA, கிராஜுட்டி,நிரந்தர ஓய்வூதியம் தவிர மற்றவற்றை வழங்கலாம் என கூறியுள்ளது. ஜார்கண்டில் நடைபெற்ற மாநில செயலர் கூட்டத்தில் இது பற்றி மத்திய சங்கத்தில் எழுப்பிய பொழுது விடுப்பு ஊதியம் நிறுத்திட குறிப்பான உத்திரவு இல்லை எனவே விடுப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என கூறியது.

 DOT உத்திரவு எண் 24/03/2003 உத்திரவு அடிப்படையில் தனிநபர் வழக்கு காரணமாக ஊழியர்களின் கிராச்சுட்டி ,நிரந்தர பென்சன் நிறுத்தினால் மட்டும் போதுமானது. மாற்ற பண பட்டுவாடா செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த உத்திரவு ஓய்வூதிய துறை பரிசீலித்து DOT 05/06/2020 அன்று  பணியில் இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை விதி 19 மூலமாகவும், ஓய்வு பெற்று இருந்தாலும் விதி 9 மற்றும் 69 அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திடலாம் என கூறியுள்ளது. ஆனால் விடுப்பு ஊதியம் தடை செய்திட தெளிவான விளக்கம் இல்லை. Leave Encashment:Encashment of leave is a benefit granted under the CCS (Leave) Rules and is not a pensionary benefit. Encashment of Earned Leave/Half Pay Leave standing at the credit of the retiring Government servant is admissible on the date of retirement subject to a maximum of 300 days.

என CCA/CCS LEAVE RULES  கூறுகிறது. DOT, DOP&T ஓய்வூதிய சலுகைகள் குறித்து உத்திரவிடலாம் விடுப்பு ஊதியம் முழுக்க BSNL   நிதியில் இருந்து வழங்கப்படுவதால் BSNL இதை  தகுந்த காரணமின்றி நிறுத்திவிட முடியாது. விருப்ப ஓய்வு ஒப்புதல் கொடுத்த பின்னர் ஊழியர்கள் சேமித்த GPF, விடுப்பு வழங்க விஜிலென்சஸ் ஒப்புதல் இல்லை தர முடியாது என நிர்வாகம் நிலை எடுக்கமுடியாது. இல்லை என்றால் விருப்ப ஓய்வுக்கு விஜிலெனஸ் ஒப்புதல் வழங்கி இருக்க கூடாது. மத்திய சங்கம் விடுப்பு ஊதியத்தை கோர வேண்டும் பிரச்சனை ஏற்பட்டால் கார்ப்பரேட் அலுவலகத்தில் விவாதிப்பதாக கூறியுள்ளது. மாவட்ட செயலர்கள் அனைத்து பிரச்சனைகளையும் துல்லியமாக தகவல்களை திரட்டிட வேண்டும். மேலும் தனிநபர் வழக்குகளில், இலாக்கா இழப்பீடு வழக்குகளில் EXGRATIA ,கிராச்சுட்டி,தொகையை விட வழக்கு கோரல் தொகை இருந்தால் விடுப்பு ஊதியத்தை நிறைத்திவைக்கலாம் என கார்ப்பரேட் அலுவலகம் விவரங்கள் கோரி உள்ளது. மேலும் இதுவரை நிர்வாகம் யாருக்கும் குற்றபத்திரிக்கை வழங்க வில்லை என்பதால் விடுப்பு ஊதியத்தை நிறுத்திவைக்க விதிகள் தெளிவாக இல்லை.

மாவட்ட சங்கங்கள், தனிநபர் வழக்குகள்,கிரிமினல் வழக்குகள், சாதி சான்றிதழ் பிரச்சனைகள் என பட்டியலிட்டு விவரங்களை சேகரிக்க வேண்டும். பிரச்சனை தீர்க்க இதுவே முதலடியாகும். அனவரது பிரச்சனைகளையும் கட்டம் கட்டமாக தீர்க்க முயற்சி மேற்கொள்வோம்.