BSNL 15/6/2020 சிறப்பு பொதுக்குழு

BSNL கம்பெனி செயலர் 15/6/2020 அன்று  சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டி உள்ளார்.
23/10/2019 அன்று மத்திய அமைச்சரவை BSNL &MTNL புத்தாகக்கம் செய்யும் பொருட்டு நான்கு முக்கிய முடிவுகளை எடுத்தது.
1)  50 வயதுக்கு மேற்பட்டோருக்கு VRS வழங்கி 17,169 கோடி ரூபாய் Ex gratia கொடுப்பது. அந்த தொகையை மத்திய அரசு பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் வழங்கும்.
2) BSNL& MTNL நிறுவனங்களுக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும். அதன் விலையான 20140 கோடி ரூபாயை மத்திய அரசு BSNL முதலீடாக மாற்றி அமைக்கும். அதற்கான GST தொகை 3674 கோடி ரூபாயையும் மத்திய அரசே வழங்கும்.
3)  VRS 31/1/2020 முதல் அமலாகிவிட்டது. சுமார் 80,000 பேர் வெளியேறிவிட்டனர்.
4)  4G அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான பணி தற்போது துவக்கப் பட்டுள்ளது  உள்

கீழ்க்கண்ட முடிவுகளை அமலாக்கவே பங்குதாரர்களின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
1)   BSNL தனது கடன்களையும் அரசு கொடுத்த பணத்தையும் திருப்பித்தர ஏதுவாக BSNLன் நிலங்களையும் சொத்துக்களையும் விற்று பணமாக்குதல்.
2)   ரூ 8500 கோடி ரூபாய்க்கான அரசு உத்திரவாதமளிக்கும் BSNL கடன் பத்திரத்தை தனி வெளியீடு மூலம் வெளியிடுவது ஒரு சில நிறுவனங்களுக்கு  (பொது மக்களுக்கு அல்ல)  விற்க்கப்படும். இந்த நடைமுறை பங்கு விற்பனையாக கருதப்படாது.

தொலைத்தொடர்பில் பன்னாடு நிறுவங்களும்., ஜியோவும் பல லட்சம் கோடிகளை வெளிநாட்டு கடன், மூலதனம் என பெற்று வரும் பொழுது ரூ 8500 கோடி பெறவே அரசின் சிகப்பு நாடா முறை பல மாதங்களை விழங்கியுள்ளது. இன்னும் எத்தனை மாதங்கள் ஆகுமோ?.

BSNL நிர்வாகம் இந்த ஆண்டு வாடகை/ லீசு விடுவதம் மூலம் ரூ2000 கோடி திரட்ட இலக்கு செய்துள்ளது. லாபம் ஈட்டிட இதுவும் முக்கியமான நடைமுறையாகும். காலி கட்டிடங்கள், இடங்கள், ஒருங்கிணைப்பு நடவடிக்கை மூலம் வருவாய் பெருக்கிட நிர்வாகத்தை மாவட்டசங்கங்கள் வலியுறுத்தி இணைந்து செயல் படுத்திட வேண்டும். வருவாய் பெருக்குவது லாபம் ஈட்டுவது  ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம்  பேச்சு வார்த்தை  நிறுவன லாபத்துடன் கட்டி போடப்பட்டுள்ளது எனவே காலிஇடங்கள் முலம் வருவாய் பெற  முழுமையாக மாவட்ட சங்கங்கள் பணியாற்றிட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.