விருப்ப ஓய்வு திட்டத்திற்க்கு பின்……

விருப்ப ஓய்வு திட்டத்திற்க்கு பின்……

BSNL நிறுவனத்தில் விருப்ப ஓய்வு 2019 திட்டத்தில் வரலாறு காணாத் வகையில் விருப்பம் தெரிவித்து விடுவிக்க பட்டுள்ளனர். ஊழியர்கள் எதிர்கால அச்சம் காரணமாக, சென்றனர். ஆனாலும் தோழர் குப்தா அவர்களின் ஒப்பற்ற ஓய்வூதியம் என்ற கொடை அனைவரையும் நம்பிக்கையிடன் செயல்பட வைத்துள்ளது. பென்சன் பிதாமகன் இன்று அனைவராலும் பேசபட்டுள்ளது. அவரது இந்த சாதனையை மறைக்க நினைத்தவர்களூம் போற்றி பேசிட செய்துள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலாக சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் தன்னை அர்பணித்து கொண்ட தோழர்கள் விருப்ப ஓய்வில் சென்றுள்ளனர். அவர்களின் அனைத்து தேவைகள், சலுகைகள் சரியான நேரத்தில் பெற்று தர நாம் கடமை பட்டுள்ளோம்.

மத்திய சங்கத்திடம் தொடர்ந்து சில பிரச்சனைகளை தீர்வு பெற்று தர வேண்டியுள்ளோம்.

விருப்ப ஓய்வு திட்டம் 2019 என தனிபதம் உருவாக்கி அவர்களை மற்ற பணி ஓய்வு பெற்றவர்களிடமிருந்து பிரிக்க கூடாது என தொடர்ந்து DOT யிடம் விவாதித்து வருகிறது.

தனி நபர் வழக்கு காரணமாக விருப்ப ஓய்வு சலுகைகள் நிறுத்தி வைக்க்கூடாது. DOP&T உத்திரவு முழுமையாக் அமுலாக்கிட வேண்டும்.

SC/ST புதிய சர்டிபிகேட் கோரி நிறுத்திவைத்துள்ளவர்களுக்கு பணி ஓய்வு சலுகைகள் வழங்கிட வேண்டும்.

VRS திட்ட பலன்கள் அனைத்தையும் காலத்தில் ஊழியர்களுக்கு வழங்கிட உறுதி செய்திட வேண்டும்.

மருத்துவ வசதி மறைமுகமாக மறுக்கப்பட்டு வருகிறது ஓய்வு பெற்ற அனைவருக்கும் மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும்.

தற்காலிக ஓய்வூதியம் குறித்து BSNL மட்டத்தில் முறையான கூட்டம் NFTE  21/01/2019 நடத்தி உறுதி படுத்தியுள்ளது.(கூட்ட குறிப்பு தேதி 05/02/2020). அனால் சங்கங்கள் ஏதும் செய்யவில்லை என தவறான செய்தி விருப்ப ஓய்வு பெற்ற தோழர்களிடம் செய்யப்படுகிறது. அது உண்மையல்ல என்பதை நமது தோழர்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

அடுத்து செய்ய வேண்டியது என்ன ?

 • மாத ஊதியத்தை எப்ரல் 1 முதல் காலத்தே வழங்கிட வேண்டும். மொத்தஊதியம் ரூVRS செல்வதற்க்குமுன் ரூ89/ (தமிழ்நாடு)   கோடிஅளவில் இருந்தது.. பிடித்தம் போக ரூ60 கோடி வழங்கியது தற்பொழுது அ.இ.அளவில் ஊதியம் வழஙக ரூ480 கோடி முதல் ரூ 510 கோடி .நிதியை நமது வருவாயில் இருந்து தர முடியும்.
 • வியாபார  உருவாக்கம் காரணமாக ஏற்படும் ஏற்படும் பாதிப்பை சரி செய்திட மாநில நிர்வாகம் ஏற்றுள்ளது.
 • SSA சங்க அமைப்பு தொடரும் என மத்திய சங்கம் கூறியுள்ளது. தலமட்டக்குழு உறுப்பினர்களை பணியில் இருப்பவர்கள் கொண்டு செயல்பட வேண்டும்.
 • ஊழியர்கள் அளவீடுகள் பாதிப்பான வகையில் மாற்றிடக்கூடாது.
 • ஊழியர்களுக்கு மருத்துவ இன்ஸுரன்ஸ் திட்டம் உருவாக்கவேண்டும்..
 • ஊதிய மாற்றகுழு கூட்டம் நடத்தி 100% கிராக்கிப்படி இணைப்பை பெற வேண்டும். லாபத்திற்க்கு பின் நிர்ணயம் சதவீதம் முடிவு செய்யலாம் நவ .2018 பேச்சு வார்த்தை பதிவின் படி DOT பரிசீலீக்க ஏற்றது. அதை வலியூறுத்தி பெறவேண்டும். மறு சீரமைப்பு செய்யபடும் நிறுவனங்கள் அந்த திட்டப்படி ஊதியமாற்றம் செய்யலாம் என்ற DPE வழிகாட்டுதல் அமுலாக்கிட கோர வேண்டும்.
 • வங்கி கடன் பொறுப்பு ரூ30000 கோடியை எட்டலாம்.அதற்கான வட்டி ரூ3000 கோடி வர வருடத்திற்க்கு செலவு பிடிக்கும்.மேலும் அசல் தவணை செலுத்த வேண்டி இருந்தால் செலவு கூடுதலாக இருக்கலாம். ஆகவே நமது வருவாய் பெருக்கிட மாவட்டம் தோறும் நிர்வாகத்துடன் விவாதித்து கட்டிடங்கள் வாடகை, செலவு குறிப்பது ஆகியவற்றை செய்திட வேண்டும். மத்திய சங்கம் பாண்டு வெளியிடுவதை விரைவு படுத்தி கடன் பொறுப்பை குறைக்கலாம்.
 • பரிவு அடிப்படை பணி தடை நீக்கப்பட வேண்டும்.
 • டெர்ம் இன்சுரன்ஸ் ஊழியர்களுக்கும் விஸ்தரிக்கப்படவேண்டும்.
 • மல்டி டாஸ்க் கேடர் உருவாக்கி தேவையான ஊழியர் நியமிக்க திட்டமிட வேண்டும்.
 • AUAB ஒற்றுமை பலடுத்திட கூடுதலாக விடுபட்ட சங்கங்களையும் சேர்க்க வேண்டும்.
 • அ.இ.முதல் மாவட்டம் வரை ஒவ்வொரு காலண்டுக்கு பின்னரும் நிதி நிலை, சேவை குறித்து முறையாக விவாதிக்க அமைப்பை உருவாக்கிட வேண்டும். அனைத்து வியாபார பகுதிகளிலும் லாபமீட்டிட திட்டமிட் வேண்டும்.
 • 21 இடம், சொத்துக்களை  ரூ20,600 கோடிக்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த நிதியை BSNL வளர்ச்சிக்கு பயபடுத்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முழுமையாக நாம் பயன் படுத்திட வேண்டும். மேலும் 15,062 இடங்கள் கண்டறியப்பட்டு, ரூ 50 கோடிக்கு மேல் பொறுமானமுள்ள சொத்துக்கள் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசுதுறை, பொதுதுறைகளுக்கு மட்டும் விற்பனை என கூறப்பட்டுள்ளது.
 • CROP 2020 என 10 லட்சம் சதுர அடி கட்டிட பரப்பை வாடகை விட கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கேந்திரமான, வாடகை பெறக்கூடிய இடங்களை வாடகைக்கு விட்டு கூடுதல் வருவாய் பெறத்திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டங்கள் கவனம் செலுத்திட வேன்டும்.
 • BSNL நிறுவனம் நிலைத்து லாபமீட்டும் துறையாக இருந்தால் மட்டுமே அனைவரது எதிர்காலமும் சிறப்பாக அமையும். எனவே நிறுவனத்தை தொடர்ந்து காத்திட போரடுவோம். .