NFTE தமிழ் மாநில சங்கம்

NFTE தமிழ் மாநில சங்கம் 

சுற்றறிக்கை எண் 1 தேதி 22/02/2020

21/02/2018 அன்று தலைமை பொது மேலாளர் அவர்களுடன் NFTE,BSNLEU இரு சங்க நிர்வாகிகளிடம் காண்டிராக்ட் ஊழியர்களின் ஊதியம், ஊழியர் எண்ணிக்கை குறைப்பு குறித்து நிர்வாக நிலைகளை விளக்கினார்.இரு சங்கங்களும் ஊழியர் விருப்ப ஓய்வு திட்டம் காரணமாக பற்றாகுறை இருக்கும் பொழுது இந்த நடவடிக்கையை கைவிடுமாறு வேண்டியுள்ளது. நிர்வாகம் கார்ப்பரேட் அலுவலக நிலை என்பதால் வேறு ஏதும் செய்ய இயலாது என கூறியுள்ளது. இந்த நடவடிக்கை தொழிற்சங்க நல்லுறவு பாதிக்கும் என கூறியுள்ளோம்..

  1. 21/02/2018 அன்று தலைமை பொது மேலாளர் அவர்களுடன் அனைத்து சங்க தலைவர்கள் சந்தித்து  ஓய்வு திட்ட்த்திற்க்கு பிந்தைய நிலை குறித்து விவாதிக்கப்பட்ட்து. தமிழகத்தின் வியாபார பகுதி மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. தூத்துகுடி திருநெல்வேலியுடன் இணைத்து  திருநெல்வேலி புதிய வியாபார பகுதியாக மாற்றம், விருதுநகர் மதுரை, காரைக்குடி வியாபார பகுதியாக மாற்றம் செய்திட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாகர் கோயில் தனி வியாபார பகுதி செயல்படும். நமது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
  2. ஒவ்வொரு காலண்டுக்குபின் மாநில, மாவட்ட நிர்வாகம் ஊழியர் சங்கங்களுடன் கலந்து பேசி வருவாய் உயர்த்துவது, அனைத்து மாவட்டங்களையும் லாபமீட்டும் மாவட்டமாக மாற்றுவது, ஊழியர் சங்கங்களுடன் நல்லனஆரோக்கியமான கலந்தாய்வு செயவது அவசியம் என கூறியுள்ளோம். பரிசீலிக்க ஏற்க பட்டது.

கீழ்கண்ட ஆலாசனைகள் முன் வைக்கப்பட்ட்து.

  • பில் வசூலிக்க பிரி பெய்டு முறையில் முகவர்கள் , விருப்பமுள்ள முன்னால் ஊழியர்களுக்கு அனுமதி வழங்குவது.
  • மாவட்டஙக்ளில் உள்ள இடங்களை வாடகைக்கு விடுவது மாவட்ட சங்களுடன் விவாதிப்பது,
  • கிராமபுற லாபமில்லாத மிக நட்டம் ஏற்படுத்தும் இடங்களை கண்டு கார்ப்பரேட் அலுவலக அனுமதியுடன் மூடிவிடுவது,
  • 4 ஜி சேவை 3ஜி மூலம் 1,70000 இணைப்புகளுடன் தமிழகம் முதலிட்தில் உள்ளது.. 4ஜி சேவை நோக்கியா மூலம் ஒரிரு மாதங்களில் செயல்படுத்திட நடவடிக்கை செய்யப்பட்டு வருகிறது.
  • ஏர் பைபர் விரிவாக்கம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • மொத்தம் 183 தொகுப்புகளில் 127 தொகுப்புக்கான டெண்டர் இறுதிசெய்யப்பட்டு கோரப்பட உள்ளது.
  • மாற்றல்கள் நிர்வாக மேம்பாட்டுக்கு என்றலும் மாவட்டங்களில் நிர்வாகம் விவாதித்து ,நல்ல சூழல் உருகவாக்கிட கோரிஉள்ளோம் STR பகுதி சென்னையில் தொடர முடிவு எடுக்க்ப்பட்டுள்ளது. ச்ட்ட்ச் நிறுவனமும் தமிழக கட்டுபாட்டில் தொடர மாநில நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது

விவாதம் திறந்த மனதுடன் நடைபெற்றது. மாற்றம் காண்போம். தொடர் விவாதம் மாற்றத்தை உருவாக்கும்..