BUDGET and BSNL family

தோழர் பட்டாபி முகநூல் பதிவு
21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் எஸ்டிமேட்டில் 3,43,678 கோடி (2019-20 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட எஸ்டிமேட்டை விட) கூடுதலாகக் காட்டப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்கான இந்த உயர்வில் இரண்டு அம்சங்கள் ஏதோவொரு வகையில் BSNL குடும்பத்தினருடன் தொடர்புடையது.

மேஜர் ஐட்டம் எண் 5. பென்ஷன் 
2019-20 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட எஸ்டிமேட்டில் 1,84,147 கோடி.
2020 – 21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் எஸ்டிமேட்டில் 2,10,682 கோடி
எஸ்டிமேட் தொகை அதிகரிப்பு 26535 கோடி. 
பட்ஜெட் ஸ்டேட்மெண்ட் 2B (செலவு அட்டவணை)யில் இதற்கான காரணமாக ’குடிமைப் பணி மற்றும் இராணுவப்பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கான ஓய்வுக்கால பலன்கள் பட்டுவாடாவிற்காக இந்த அதிகரிக்கப்பட்ட தேவை’ எழுந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேஜர் ஐட்டம் எண் 6. தகவல் தொடர்பு
2019-20 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட எஸ்டிமேட்டில் 20,649கோடி.
2020 – 21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் எஸ்டிமேட்டில் 65,514கோடி
எஸ்டிமேட் தொகை அதிகரிப்பு 44,865 கோடி. 
”இந்த அதிகரிப்பு BSNL / MTNL நிறுவனங்கள் 4ஜி அலைகற்றை சேவையை வழங்குவதற்கான முதலீட்டு உள்ளீட்டிற்காகவும், BSNL / MTNL நிறுவனங்களில் விஆர்எஸ் விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தவும், அதற்காக அந்நிறுவன விஆர்எஸ் பெற்ற ஊழியர்களுக்கு கருணைக்கொடை (எக்ஸ்கீரிஷியா) தொகை பட்டுவாடா செய்வதற்காகவும் பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது” எனக் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பொருத்தமான விஷயம் 2020 –21ம் ஆண்டிற்கான ’ஒதுக்கீடு கோர’லின் (டிமாண்ட்ஸ் ஃபார் கிராண்ட்ஸ் DFG) குறிப்புகள் (நோட்ஸ் ) 
அந்தக் குறிப்பின்படி
பத்தி 21. பொதுத்துறை நிறுவனங்கள் (PSU)களுக்கு ஆதரவு: அதில் BSNL/MTNL/ITI நிறுவனங்களுக்கான 11 ஆதரவு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பத்தி 21.06 BSNL நிறுவனத்தில் 4ஜி அலைகற்றை சேவையை வழங்குவதற்கான முதலீட்டு உள்ளீட்டிற்கான தொகை 14,115 கோடி
பத்தி 21.07 MTNL நிறுவனத்தில் 4ஜி அலைகற்றை சேவையை வழங்குவதற்கான முதலீட்டு உள்ளீட்டிற்கான தொகை 6,295கோடி 
பத்தி 21.08 BSNL / MTNL நிறுவனங்களில் விஆர்எஸ் பெற்ற ஊழியர்களுக்கு கருணைக்கொடை (எக்ஸ்கீரிஷியா) தொகை பட்டுவாடா செய்ய 9,889.65 கோடி. 
பத்தி 21.09 BSNL / MTNL நிறுவனங்களில் விஆர்எஸ் விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த 3,294.77கோடி. 
பத்தி 21.10 மற்றும் பத்தி 21.11 BSNL / MTNL நிறுவனங்களின் ஜிஎஸ்டி செலவிற்கான உதவி (கிராண்டு) நிதியளிப்பு பற்றியது 
பென்ஷன் மற்றும் இதர செலவுகளுக்கான ’ஒதுக்கீடு கோர’லில் (டிமாண்ட்ஸ் ஃபார் கிராண்ட்ஸ் DFG) 13,981.68 கோடி ஒதுக்கீடு காட்டப்பட்டுள்ளது (2019-20 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட எஸ்டிமேட்டில் இதற்கான தொகை 13,190.27 கோடியாக இருந்தது)
இவ்விடத்தில் பென்ஷனுக்கான ஒதுக்கீடு என்பதன் பொருளாவது, 
”பென்ஷன்…பணியிறுதிக்கால ஓய்வுக்கால பலன்களுக்கான இந்த ஒதுக்கீடு BSNL நிறுவனத்தில் அப்சார்ஃப்டு செய்யப்பட்ட ஊழியர்கள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு ஊழியர்கள் மற்றும் 01-04-2014 முதலான MTNL ஊழியர்களுக்கானது”

மற்ற இரண்டு விளக்கங்களாவன:
பத்தி 21.08ல் கூறப்பட்ட BSNL / MTNL நிறுவனங்களில் விஆர்எஸ் பெற்ற ஊழியர்களுக்கு கருணைக்கொடை (எக்ஸ்கீரிஷியா) தொகை பட்டுவாடா….இந்த ஒதுக்கீடு BSNL / MTNL நிறுவனங்களிலிருந்து விஆர்எஸ் பெறும் ஊழியர்களுக்கு கருணைக்கொடை (எக்ஸ்கீரிஷியா) தொகை பட்டுவாடா செய்வதற்கானது
பத்தி 21.09 ல் கூறப்பட்ட BSNL / MTNL நிறுவனங்களில் விஆர்எஸ் விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்துதல் … இந்த ஒதுக்கீடு BSNL / MTNL நிறுவனங்களில் விஆர்எஸ் விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவதற்கானது

பின்குறிப்பு
29 அக்டோபர் 2019 தேதியிட்ட DOT மெமோ
2.(iii) விஆர்எக்கான எக்ஸ்கிரீஷியா பட்டுவாடா (ரூ17,169 கோடி) மற்றும் முன்கூட்டியே வழங்கப்படும் ஓய்வுக்காலப் பலன்களுக்கான செலவுத் தொகை (பத்து ஆண்டுகளில் ரூ 12,768 கோடி) இவ்விரண்டும் இந்திய அரசின் பட்ஜெட் உதவி ஒதுக்கீடு பெறப்பட்டு வழங்கப்படும். விஆர்எஸ்-க்கான எக்ஸ்கிரீஷியா இரண்டு தவணைகளில் பட்டுவாடா செய்யப்படும்; முதல் 50 சதவீதம் 2019 -20 நிதி ஆண்டிற்குள்ளாகவும் அடுத்தது 2020 -21 நிதியாண்டின் முதல் காலாண்டின் போதும் பட்டுவாடா செய்யப்படும்.
BSNL விஆர்எஸ் திட்டம் 2019 நாள் 4-11-2019
பத்தி 6.1e இந்தத் திட்டத்தின்படி விஆர்எஸ்-ல் ஓய்வுபெறும் அனைத்து ஊழியர்களுக்கும் எக்ஸ்கிரீஷியா தொகை இரண்டு சமமான தவணைகளாகப் பட்டுவாடா செய்யப்படும். முதல் தவணை 2019 -20 நிதி ஆண்டிற்குள்ளாகவும் அடுத்த இரண்டாவது தவணை 2020 -21 நிதியாண்டின் முதல் காலாண்டின் போதும் பட்டுவாடா செய்யப்படும்.
–தமிழில் : நீலகண்டன், 
என்எப்டிஇ, கடலூர்