ஜபல்பூர் தேசிய செயற்குழு கூட்டம் 10/11 நவம்பர் 2019

ஜபல்பூர் தேசிய செயற்குழு கூட்டம் 10/11 நவம்பர் 2019

நமது சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டம் ஜபல்பூரில் நவம்பர் 10/11 தேதிகளில் நடைபெற்றது. ஜபல்பூர் தோழர்கள் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். தமிழகத்தில் இருந்து தோழர்கள்  நடராஜன், காமராஜ், பழனியப்பன், செம்மல் அமுதம், முரளிதரன், கோபால கிருஷ்ணன், அன்பழகன், மோகன் குமார், தங்கமணி, அசோக்ராஜன்,மற்றும் புதுவை தோழர்கள், சிறப்பு அழைப்பாளராக தோழர் ஆர்.கே. ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேர்தல் வெற்றியை விருப்ப ஓய்வு திட்ட பலன்கள், பாதிப்புகள் குறித்த விவாதம் நடைபெற்றது. சங்கம் விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்க இயலாத நிலையில், ஊழியர்கள் பெறும் எண்ணிக்கையில் விருப்பம் தெரிவித்துள்ளனர். பல்வேறு நியாயமான சந்தேகங்கள், அது குறித்த விளக்கங்கள் கோரி விரைந்து பெறவும் கோரப்பட்டது. விருப்ப ஓய்வு திட்டம் 2019 க்கு பின் ஊதிய மாற்ற பலன், ஓய்வூதிய பலன் 37அ கீழ் உறுதி படுத்த வேண்டிய நிர்வாகம் முன்னுக்கு பின்  முரணாக உத்திரவுகள் வெளியிட்டதை மத்திய சங்கம் தகுதி படைத்த அரசு இலாகா விளக்கம் வழங்கிட கோருவது என முடிவு செய்யப்பட்டது. விருப்ப ஓய்வு செல்லும் ஊழியர்களின் எதிர்காலம் காத்திட முடிவு செய்யப்பட்டது.

கார்பரேட் அலுவலகத்தில் இருந்து GM(SR)  A.M GUPTA, தலைமை பொது மேலாளார் சுக்லா, ம.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரைஆற்றினார். ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பணி ஒய்வு உத்திரவில்(PPO) குறிக்கப்படும் என கூறினார்.ஆனால் ஒய்வு கால மாற்றம் குறித்து உத்திரவாதம் தெரிவிக்கவில்லை. அதற்குரிய இலாக்கா DOT, MOF விளக்கம் மட்டுமே தேவையான ஒன்று ஆகும். BSNL க்கு அதிகாரமில்லை.

தமிழகம் சார்பாக மாநில செயலர் கருத்துகளை முன் வைத்து பேசினார். தீர்மானங்களும் முன் வைக்கப்பட்டன. தோழர் காமராஜ் சம்மேளன செயலர்,  சம்மேளன உதவித்தலைவர் தோழர் சி.கே.மதிவாணன், மாநில பொறுப்பு செயலர் இளங்கோவன், அன்பழகன் STR மாநில செயலர்,  ஆகியார் உரை நிகழ்த்தினர்.

விருப்ப ஓய்வு திட்டத்திற்க்கு பின் வாடிக்கையாளர் சேவை, ஊழியர் நிலை, நிறுவன நிர்வாக மாற்றம், மாற்றல்கள், பிடித்தம் செலுத்தமல் இருப்பது , ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகை, ஓய்வூதியம் அது குறித்த விதிகளின் விளக்கங்கள் விவாதிக்கப்பட்டன. மத்திய சங்கம் ஊழியர்களின் எதிர்பார்ப்பை கணக்கில் கொண்டு பாதகங்கள் நீக்கிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளது. நீதிமன்றம் செல்வது குறித்த முடிவை மத்திய சங்கம் ஏதும் மேற்கொள்ளவில்லை.. மத்திய சங்கம் தனது கருத்தை வலைதளத்தில் பதிவு செய்துள்ளது. .