புத்தாக்கம் கருத்தரங்கம், தபால் தந்தி இயக்கம் கடந்து வந்த பாதை, உறுப்பினர் சரிபார்ப்பு நன்றி அறிவிப்பு விழா –கடலூர், 06/11/2019.

06/11/2019அன்று டவுன் ஹாலில் நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு தோழர் P..காமராஜ் , மாநில தலைவர் தலைமை ஏற்க, மூத்த தோழர் சடகோபன், சென்னை, NFTE சங்கத்தின் தீவிர பற்றாளர்.அதிகாரி ஆன பின்னரும் நமது சங்க மாநாடுகள்,சிறப்பு கூட்டங்களில் தவறாது  பங்கெடுத்தவர் நமது NFTE சங்க கொடியை கோஷம் முழங்க ஏற்றிவைத்தார். பின்னர்  மறைந்த தோழர் குருதாஸ் குப்தா, முன்னாள் AITUC அவர்களின் திரு உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தியபின், கூட்டம் துவங்கியது. தோழர் D.ரவிச்சந்திரன்,மாவட்ட உதவிசெயலர் வரவேற்புக்குபின், மாநிலசெயலர் கே.நடராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தோழர் R.பட்டாபி, மேனாள் மாநில செயலர் துவக்கவுரையில் நமது சங்கம் புதிய பாதைகளை உருவாக்கி பல்வேறு தடைகளை உடைத்து முன்னேறியதையும், விருப்ப ஓய்வு திட்டம் காரணமாக ஏற்படகூடிய நிலைகளை விளக்கினார்.(உரை பின்னர் தனியே வெளியடப்படும்)

கருத்தரங்கில் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்கள் M.சண்முகம்,,LPF கே.சுப்பராயன்,AITUC D..ரவிக்குமார், விசிக, தலைமை பொது மேலாளர் திருV..ராஜூ,, ITS , கடலுர் பொது மேலாளர் திரு.ஜெயகுமார் ஜெயவேலு ஆகியோர் உரை நிகழ்த்தினர். நமது நியாயமான கோரிக்கைகளை உரிய இடத்தில், வாதாட உறுதி கூறினர். மாநில சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலர்கள், மாநில உதவி செயலர் G.S. முரளிதரன் ஆகியார் சிறப்பு செய்தனர்.

‘”தபால் தந்தி இயக்கம் கடந்து வந்த பாதை புத்தக வெளியீட்டில் நூல் குறித்த மதிப்புரையை கடலூர் வெ.நீலகண்டன் ஆற்றினார். நூலை வெளியிட்டு தோழர் T.M.மூர்த்தி பொதுசெயலர் AITUC அவர்கள் உரையாற்றினார். நூலை பெற்றுக்கொண்ட தோழர் G..ஜெயராமன் மேனாள் சம்மேளன செயலர் வாழ்த்தினார். ஏற்புரை தோழர் S.தமிழ்மணி மேனாள் மாநிலத்தலைவர் நிகழ்த்தினார்.

தேர்தல் நன்றி பாராட்டு விழாவில் தோழர் ஆர்.கே. மேனாள் சம்மேளன செயலர், துவக்கவுரை ஆற்றினார். TEPU பொதுசெயலர் தோழர் சுப்புராமன், SEWA BSNL அ.இ.ஆலோசகர் தோழர் P.N..பெருமாள், TEPU மாநில செயலர் M..ரவீந்திரன்,அ.இ.துணைத்தலைவர் S.பழனியப்பன், அ,இ,சி,அழைப்பாளர் A.செம்மல் அமுதம், STR மாநில செயலர் R.அன்பழகன்,TMTCLU பொதுசெயலர், R..செல்வம் தோழர் .K.சேது S.S.கோபாலகிருஷ்ணன் ஆகியார் உரையாற்றினார்கள். விழா சிறப்பாக நடைபெற நிதி வழங்கி, ஊழியர்களை பங்கேற்க செய்திட்ட மாவட்ட செயலர்கள்,மாநில சங்க நிர்வாகிகள் அனைவரையும் மாநில சங்கம் பாராட்டிகிறது.

தேர்தல் வெற்றியை உறுதிசெய்த வேர்கால் தோழர்களுக்கு மாநில சங்கம் நன்றி தெரிவித்துக் கொண்டது.

600 க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு உணவு, மற்றும் உபசரித்து மிக சிறப்பாக நடத்தி தந்த கடலூர் மாவட்ட சங்கத்திற்கு நன்றி பாராட்டப்பட்டது.

CGM(o),,திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட செயலர்கள் கலந்துகொள்ள இயலவில்லை என தகவல் தந்தனர். ஆனாலும் மாவட்டத்தில் இருந்து தோழர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் தோழர் R.ஶ்ரீதர் , விழா ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார்.