ஒருநாள் உண்ணாவிரதம் அக் 18/2019

அக் 18 ஒரு நாள் உண்ணாவிரத போரட்டம்.

11/10/2018 அன்று NFTE சங்க அலுவலகத்தில் கன்வீனர் தோழர் சந்தேஸ்வர் சிங் தலைமையில் நடைபெற்றுள்ளது.

FNTO, BTEU ஆகிய சங்கங்களும் இணந்து போராட முன் வந்துள்ளனர். நல்ல ஒற்றுமைக்கான முன் முயற்சியை பாராட்டுவோம்.

கோரிக்கைகள்

1)   செப் மாத ஊதியத்தை உடனே வழங்கு ! மாதம் தோறும் ஊதியத்தை முறையாக வழங்கு ! காண்டிராக்ட் ஊழியர்களின் ஊதியத்தை காலதமதமின்றி வழங்கு !

2)   BSNL புத்தாக்கத்திற்க்கு 4G வழங்குதல்/ நிதிஉதவி கடன் ஏற்பாடு, BSNL சொத்துக்களை விற்று BSNL க்கு பயன்படுத்து !

3)   ஊதியமாற்றம், ஓய்வூதிய மாற்றம், நேரிடை ஊழியர்களின் 30% ஓய்வுகால சலுகைகள் வழங்கு !

4)   பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்களின் தவணைகளை உடனடியாக அந்த நிறுவனங்களிடம் உடனே செலுத்து !

5)   மின்சார பில்கள், வாடகை உள்ளிட்ட நிலுவைகளை உடனே செலுத்து !

என கோரி 18/10/2019 அன்று டெல்லி, மாநில தலைநகர், மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள்  உண்ணா நோன்பு  போராட்டம் நடத்திட வேண்டுகோள்  AUAB விடுத்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தோழமை சங்கங்களை ஒன்றிணைத்து போராட திட்ட மிடுவீர்.

 K..நடராஜன், மாநில செயலர்