தஞ்சையில் 26/09/2019 அன்று நடைபெற்றNFTE தமிழ் மாநிலசங்கத்தின் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்
1. எட்டாவது தேர்தலில் NFTE சங்கத்தின் வெற்றிக்காக பாடுபட்ட மாநில, மாவட்ட , கிளைச் சங்கத் தோழர்கள் , கூட்டணித் தலைவர்கள் மற்றும் முன்னணித் தோழர்களுக்கு மாவட்டச் செயலர்கள் கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றது.
2.NFTE சங்க வெற்றிக்காக தேர்தலில் பணியாற்றிய நமது தோழர்களுக்கும் சகோதர சங்கங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்புக்க்கூட்டம் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து BSNL புத்தாக்க கோரிக்கை மாநாடாக கடலூரில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
3. மாநாட்டு நிதியாக பெரிய மாவட்டங்கள் ரூ.7000/-மும் , சிறிய மாவட்டங்கள் ரூ.3000/-மும் வழங்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
4. TEPU, SEWA BSNL, SNATTA உள்ளிட்ட நமது தோழமை சங்கங்கள் மட்டுமல்லாது, FNTO, BTEU உள்ளிட்ட அனைத்து Non Executive சங்கங்களையும், அதிகாரிகள் அமைப்புக்களையும் இணைத்து , யாரும் விடாபடாமல், யாரையும் விட்டுவிடாமல் பரந்துபட்ட ஒற்றுமையான அமைப்பை கட்டமைத்து எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல்திட்டத்தின் அடிப்படையில் வலுவான போராட்டங்களை கட்டமைப்பது என தீர்மானிகக்கப்பட்டது.
5. *LIC, PLI, BANK MOU, GPF, SOCIETY* ஆகியவற்றிக்கான ஊழியர்கள் சம்பளத்தில் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு செலுத்திடவும், ஊழியர்களின் சம்பளத்தை உரிய நாளில் வழங்கிடவும், 7 மாதகாலமாக வழங்கப்படாமல் உள்ள ஒப்பந்தொழிலாளர்கள் சம்பளத்தை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி நிர்வாகத்திற்கு கடிதம் கொடுப்பது. மத்திய சங்க தலைவர்கள் மூலமாக நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் போராட்ட வடிவங்களை முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
6. முதற்கட்டமாக தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பாக மாநிலம் தழுவிய போராட்டத்தை வரும் அக்டோபர் 10ம் தேதியன்று அனைத்து மாவட்டங்களிலும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.நமது கூட்டணி சங்கங்களை வாழ்த்துவதற்கு அழைத்திட வேண்டும்.
7. நின்று போயுள்ள 3வது ஊதிய மாற்றப் பேச்சு வார்த்தையை மீண்டும் துவக்கிட மத்திய சங்கம் வலியுறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
8.போனஸ்: 2013 ல் நமது NFTE சங்கம் அங்கீகாரம் பெற்ற பின்னர் தான் லாபம் இல்லை எனவே போனஸ இல்லை என்பது தவறு. DPE வழிகாட்டுதல் படி நஷ்டம் அடையும் பொதுத்துறை நிறுவனத்திலும் குறைந்த பட்ச போனஸ் வழங்கப்படவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி JCM ல் பேசி 2015 16 ம் ஆண்டிற்கான Ad-hoc bonus பெற்றோம். அதே அடிப்படையில் இந்த ஆண்டும் போனஸ் பெற்றிட மத்திய சங்கம் அனைத்து முயற்சியும் மேற்கொள்ள வேண்டும்.
9. பென்ஷன் பங்களிப்பு நமது சம்பள விகிதத்தில் அதிக பட்சத்தில் மத்திய அரசுக்கு செலுத்த படுவதை நிறுத்தி நாம் பெறும் சம்பளத்தில் தான் ஓய்வூதிய பங்களிப்பு BSNL செலுத்திட மத்திய சங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேவைபட்டால் நீதிமன்றத்தை அணுக வேண்டும். இதன்மூலம் BSNL ன் நிதிச்சுமை ஒரளவுக்கு குறையும்.
10. வணிகப்பகுதி உருவாக்கத்தில் தேவையான மாற்றங்களை மாநிலச் சங்கத்துடன் கலந்து பேசி மறு உருவாக்கம் செய்திட தற்போது நமது ஊழியர்கள் சந்திக்கின்ற பிரச்சனை தீர்த்திட மாநில நிர்வாகத்தை வலியுறுத்துவது .
11.குறுகிய காலகட்டத்தில் மாவட்டச் செயலர்கள் கூட்டத்திற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த தஞ்சை மாவட்ட NFTE, AIBSNLPWA மற்றும் ஒப்பந்ததொழிலாளர்கள சங்க தோழர்களுக்கு மாவட்டச் செயலர்கள் கூட்டம் தனது நன்றிகளை தெரிவிக்கிறது..