தஞ்சை மாவட்டச் செயலர்கள் கூட்ட முடிவுகள்-

தஞ்சை மாவட்டச் செயலர்கள் கூட்ட முடிவுகள்———————————————————————-BSNL வளம்…  ஊழியர் நலம்…  இதுவே இன்றைய முக்கிய இலக்கு. எனவே  இந்த  இலக்கை அடைய SEWA உள்ளிட்ட  அனைத்து சங்கங்களையும்  ஒன்றிணைத்து பலமிக்க  ஒற்றுமையான அமைப்பாக AUAB கூட்டமைப்பை வலுப்படுத்துவது. அதன் மூலம் வலுவான போராட்டங்களையும்… இயக்கங்களையும் நடத்துவது.———————————————————————- ஊழியர்களின் சம்பளத்தை உரிய தேதியில் வழங்கிடவும்… பிடித்தங்களைத் தாமதமின்றி செலுத்திடவும் BSNL நிர்வாகத்தை  மத்திய சங்கம் அழுத்தமாக வலியுறுத்தி உடனடியான போராட்டங்களை அறிவிக்க வேண்டும்.  அதன் முதற்கட்டமாக தமிழ் மாநிலச்சங்கத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை10/10/2019 அன்று அனைத்து மாவட்டங்களிலும் நடத்துவது. ———————————————————————-தடைபட்டு நிற்கும் 3வது ஊதிய மாற்றப் பேச்சு வார்த்தையை BSNL நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன்உடனடியாகத் தாமதமின்றி துவக்கிட வேண்டும்.———————————————————————-வணிகப்பகுதி உருவாக்கத்தில் ஊழியர்களுக்கு பல்வேறு சங்கடங்களும்… துன்பங்களும் நேர்ந்துள்ளன. எனவே தேவையான மாற்றங்களை மாநில நிர்வாகம்  மாநிலச் சங்கத்துடன் கலந்து பேசி இணைப்பால் நேர்ந்த இன்னல்களைக் களைய வேண்டும்.———————————————————————-தேர்தல் வெற்றிக்கு உழைத்த மற்றும் வாக்களித்த  தோழர்களுக்கு நன்றி தெரிவித்திடவும்… BSNL புத்தாக்கத்திற்கு அழுத்தம் கொடுத்திடவும்… அக்டோபர் இரண்டாவது வாரத்தில் கடலூரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் BSNL புத்தாக்க கோரிக்கை மாநாட்டை நடத்துவது.———————————————————————-எட்டாவது தேர்தலில் NFTE சங்கத்தின் வெற்றிக்காக பாடுபட்ட மாநில, மாவட்ட, கிளைச் சங்கத்தோழர்கள் , கூட்டணித் தலைவர்கள் மற்றும் முன்னனித் தோழர்களுக்கு மாவட்டச் செயலர்கள் கூட்டம்  தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.courtesy karaikudi ssa web site