BSNLEU தமிழ் மாநில செயலருக்கு

BSNLEU தமிழ் மாநில செயலருக்கு….

“உங்கள் மாவட்டத்தில் நமது சங்கத்திற்கு வாக்குகள் குறைந்ததற்கு காரணம் கூறவும்” என்று, தமிழ்நாட்டில் உள்ள தன் மாவட்டச்செயலர்களை WHATSAPP-ல், BSNLEU சங்கத்தின் துணைப்பொதுச்செயலர் தோழர் செல்லப்பா கேட்டுள்ளார். நிச்சயமாக, அச்சங்கத்தின் பொதுச்செயலாளரும் தன் மாநிலச்செயலர்களிடம் இதே கேள்வியை கேட்டிருப்பார்.

தாக்குதல்கள், சதி, துரோகம் (BETRAYAL – THE ACT OF NOT BEING LOYAL WHEN OTHER PEOPLE BELIEVE YOU ARE LOYAL) ஆகியனவற்றிற்கு இடையே 7-வது முறையாக BSNLEU வெற்றி பெற்றிருக்கிறது என்று தேர்தல் முடிந்ததும் அதன் பொதுச்செயலர் எழுதுகிறார்.

தோழர் செல்லப்பாவின் கேள்வியும், அவரது பொதுச்செயலரின் எழுத்தும் குறிப்பிடுவது ஒன்றையே. BSNLEU சங்க உறுப்பினர்களில் பெருவாரியானவர்கள் BSNLEU சங்கத்திற்கு வாக்களிக்கவில்லை என்பதையே – BSNLEU சங்க அனைத்து தலைவர்களும் மார்தட்டி கூறிக்கொண்ட 65000 உறுப்பினர்களில். 17000 பேர் அச்சங்கத்திற்கு வாக்களிக்கவில்லை என்பதையே ! சொந்த உறுப்பினர்களே எதிராய் வாக்களித்ததால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியை பற்றி பேசவே அக்டோபர் மத்தியில் CEC என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.

BSNLEU சங்கத்தின் நிலைமை இப்படியிருக்க, அதன் தமிழ் மாநில சங்கம், இந்த தேர்தலில் தோற்றது NFTE சங்கம் தான் என்று எழுதுகிறது. இத்தோடு நிறுத்தியிருந்தால், அற்ப சந்தோஷப்பட்டுக்கொண்டு போகட்டும் என்று விட்டிருக்கலாம்.

ஆனால், NFTE சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவரும், சென்னை தொலைபேசி மாநிலச்செயலருமான தோழர் மதிவாணனுக்கு பதில் சொல்கிறோம் என்ற பெயரில் கூவமே தலை குனியும் அளவிற்கு தரம் தாழ்ந்து எழுதியுள்ளார் BSNLEU சங்கத்தின் தமிழ் மாநிலச்செயலர். 4 சத வாக்குகளையம், 5 மாவட்டங்களையும் இழந்து நிற்கும் பரிதாப நிலை புரிகிறது. ஆனால், இவ்வளவு தரம் தாழ்ந்து எழுதினால் மட்டுமே BSNLEU பொதுச்செயலரின் பாவமன்னிப்பு கிடைக்கும் என்பதுதான் எங்களுக்கு புரியவில்லை. வெறி பிடித்த நாய் கூட தெருவில் ஒருவர் இருவரை கடிக்காமல் விட்டு விட்டு போகும், ஆனால், ஒருத்தர் தவறாமல் கடித்திருக்கிறார் இவர்.

ஓட்டு பொறுக்க, SEWA, TEPU ஆகியனவற்றோடு புறக்கடை வழியாக NFTE சங்கம் அருவருக்கத்தக்க கூட்டணி வைத்துக்கொண்டதாம். இனி NFTE சங்கம் செங்கொடியை தூக்கி எறிந்துவிட்டு நீலக்கொடி பிடித்துக்கொள்ளலாமாம். இதற்கு மேலும் NFTE செங்கொடியை கையிலேந்தி செல்லும் என்று சொன்னால், அது உழைப்பாளி வர்க்கத்தின் போராட்டங்களில் உயிர் நீத்த தியாகிகளை அவமதித்தது போலாகிவிடுமாம். NFTE சங்கத்தை விமர்சிக்க மாட்டோம் என அறிவித்து. அதனை நேர்மையாக BSNLEU செயல்படுத்தியும், NFTE சங்கம் BSNLEU சங்கத்தின் மீது டன் டன்னாய் சேற்றை வாரி இறைத்ததாம். ஓட்டு பொறுக்குவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றால், இதை விட தெருவில் இறங்கி பிச்சையெடுக்கும் தொழிலை NFTE செய்யலாமாம்.

BSNLEU தமிழ் மாநில செயலருக்கு சில கேள்விகள்

1. இந்த தேர்தலில் நீங்கள் பெற்றது வெற்றியா, தோல்வியா ?

2. மூன்று முறை ஓட்டு பொறுக்க, ஓட்டு பிச்சையெடுக்க, SEWA அமைப்போடு கூட்டணி வைத்துக்கொண்டீர்களே, அப்போதெல்லாம் நீங்கள் என்ன வண்ணக்கொடியை ஏந்தினீர்கள்? தொடர்ந்து செங்கொடியை ஏந்தும் சிறப்பு அனுமதியை நீங்கள் மட்டும் எங்கிருந்து பெற்றீர்கள் ?

3. NFTE சங்கத்தை விமர்சிக்கமாட்டோம் என்கிற அறிவிப்பை செயல்படுத்தியதாக நீங்கள் கூறுகிறீர்கள், BY AND LARGE செயல்படுத்தியதாக உங்கள் பொதுச்செயலர் கடிதம் எழுதுகிறார்……. எமது மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள ஒரு ஊரில், கடைக்கோடி NFTE உறுப்பினரிடம் கூட, தோழர் சந்தேஷ்வர் சிங்கை தனி நபர் விமர்சனம் செய்த உங்கள் சங்கமா ‘அறிவிப்பை’ அமல் படுத்திய சங்கம் ?

4. முதலில் சங்கப்பதிவு செய்து, முதல் வரிசையில் உட்கார்ந்து, எல்லோரும் மறக்காமல் முதலில் BSNL-க்கு OPTION கொடுத்துவிட்டு, உங்களின் 15 ஆண்டுகால தோல்விகளை மறைக்க, இந்த தேர்தலின் போது கூட, DOT-யில் இருந்த நம்மை BSNL-க்கு மாற்ற NFTE ஒப்புக்கொண்டது தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று ஊர் முழுக்க கூறிய நீங்களா “NFTE-யை விமர்சனம் செய்யா அறிவிப்பை” அமல்படுத்தியவர்கள் ?

5. உங்கள் குறைகளை மறைக்க, இதென்னவோ GTECS RGM தேர்தல் போல, மாநிலம் முழுதும் சொசைட்டி பற்றியே பேசி ஓட்டு பொறுக்க பார்த்தீர்களா, இல்லையா ?

6. சென்ற ஆறு ஆண்டுகளில், நிர்வாகத்திடம் நூறு முறை “எங்கள் சங்கம் தான் முதன்மை சங்கம்” என்று நினைவூட்டல் கடிதம் எழுதினாரே உங்கள் பொதுச்செயலர், சம்பளம் வராததற்கு மட்டும் முதன்மை சங்கத்தை காரணம் காட்டக்கூடாதா?

சாக்கடை பாஷையை நிறுத்துங்கள் … சரிவிலிருந்து மீள நாகரீகமான வழியை தேர்ந்துடுத்து பயணிக்க பாருங்கள் தோழரே !