CGM அலுவலக தேர்தல் பிரச்சார சிறப்புக் கூட்டம்

தமிழ் மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 19/08/2019 அன்று மதிய உணவு இடைவேளையில் தேர்தல் பிரச்சார சிறப்பு கூட்டம் நடைபெற்றது.தோழர் K நடராஜன் மாநில செயலர் வரவேற்புரையாற்றிட தோழர் G S முரளிதரன் மாநில உதவிச் செயவர் தலைமை தாங்கினார்.தோழர் சந்தேஸ்வர்சிங் பொதுச்செயலாளர் தனது சிறப்புரையில் விருப்ப ஓய்வு திட்டம்(VRS), ஒய்வு பெறும் வயதை 58 ஆக குறைத்தல் BSNL சந்தித்து வரும் நிதி நெருக்கடி குறித்து விரிவாக உரையாற்றி தேர்தல், நாம் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை சங்கமாக இருக்க வேண்டியதின் அவசியம் குறித்து தெளிவுபடுத்தினார்.அவரது உரையை தோழர் காமராஜ் சம்மேளச் செயவர் மொழியாக்கம் செய்திட்டார். தோழர் அ செம்மல் அமுதம் சம்மேளனச் சிறப்பு அழைப்பாளர், தோழர் L சுப்பராயன் மாநில பொருளாளர், தோழர் சேது ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். CGM அலுவலகத் தோழர்கள் தோழியர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.