BSNLEU தலைமையின் தடுமாற்றம்.

எட்டாவது சரிபார்ப்பு தேர்தல் பிரச்சார களத்தில் ஊழியர்கள் மத்தியில் தனக்கு ஏற்பட்டுள்ள பின்னடை-வை கண்டு BSNLEU தலைமை தடுமாறுகிறது,. இதற்கு முன்னர் நடந்த பல தேர்தலில் TEPU, SEWA BSNL ,FNTO உள்ளிட்ட பல சங்கங்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. BSNLEU சங்கம். யதார்த்தத்திற்கு புறம்பாக வாக்குறுதிகளை அள்ளிவீசி கூட்டணி சங்கங்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற BSNLEU சங்கம் , ஊழியர் நலன்களை காக்க தவறியதால் மெல்ல மெல்ல ஊழியர்களின் வெறுப்புக்கு உள்ளானது. நம்பிக்கையை இழந்தது. கூட்டணி சங்கங்களின் தலைவர்களும் BSNLEU சங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விளக்கி கொண்டனர்.

தேர்தல் களத்தில் தனித்து விடப்பட்ட BSNLEU, ஒரு காலத்தில் தன்னுடன் இருந்த சங்கங்கள் எல்லாம் NFTE பேரியக்கத்துடன் மெல்ல நகர்வது கண்டு அச்சம் கொண்டது. மேலும் FNTO சங்கத்தின் அகில இந்திய செயற்குழுவில் NFTE பொதுச் செயலாளர் தோழர் C . சிங் அவர்கள் கலந்து கொண்ட செய்தி BSNLEU சங்கத்திற்கு பேரிடியாய் இருந்தது. அச்சத்தின் உச்சத்திற்கு சென்ற BSNLEU நிர்வாகத்தின் கதவை தட்டியது. SEWA BSNL மீது புகார் கடிதம் கொடுத்தது. SEWA BSNL அமைப்பு யாருக்கும் தேர்தலில் ஆதரவு அளிக்கக்கூடாது என்று நிர்வாகத்தை சகோதரர் N. D. ராம் பொது செயலாளர் SEWA BSNL அவர்களுக்கு கடிதம் எழுத வைத்தது. SEWA சகோதரர்களின் அடிப்படை உரிமையை பறித்திட., ஒன்றுபட்டு ஜனநாயக கடமை ஆற்ற விடாமல் தடுக்கும் செயலை BSNLEU முன்னெடுத்துள்ளது.

இச்செயலை NFTE-BSNL சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

SEWA சகோதரர்களின் முடிவெடுக்கும் உரிமையையே தட்டிப்பறிக்க நினைக்கும் BSNLEU சங்கத்திற்கு தோழர்கள் இந்ததேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.

BSNLEU சங்கம் தங்கள் அகில இந்திய செயற்குழுவில் தாங்கள் 51% மேல் ஒட்டு வாங்கிவிடுவோம், என்றும் அப்படி வாங்கினாலும் இரண்டாவது சங்கத்திற்கு அங்கீகாரம் தரவேண்டும் என்று ஒரு தீர்மானம் போட்டனர். அவர்களின் அந்த தீர்மானம் உண்மை எனில், யார், யாருக்கு ஆதரவு அளித்தால் என்ன என்று அமைதியாக தேர்தல் பணி ஆற்ற வேண்டியதுதானே? ஏன் நிர்வாகத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு கூட்டணி கூடாது SEWA BSNL யாருக்கும் ஆதரவு அளிக்கக்கூடாது என்று புகார் அளித்து உத்தரவு பெற வேண்டும்?. ஒட்டு மொத்த ஊழியர்களும் BSNLEU சங்கத்தின் கபட நாடகத்தை உணர்ந்து விட்டனர்.

முதன்மை சங்கமாக இருந்த போதும் ஊழியர் நலன் காக்க தவறிய BSNLEU சங்கத்தை சற்றே தள்ளி இரும் என்று பின்னுக்கு தள்ளி, BSNL ஆக மாறிய போது கடும் போராட்டத்தை நடத்தி அரசு பென்ஷன் என்றும் உண்டு என்று 37 (A) சட்டபூர்வமான உத்திரவாதம் பெற்று ஊழியர் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிய தியாக தலைவன் தோழர் குப்தா வழி நடக்கும் NFTE BSNL சங்கத்தை முதன்மை சங்கமாக ஆக்கிட இந்திய தேசம் எங்கும் உள்ள BSNL ஊழியர்கள் உறுதி பூண்டுள்ளனர். அவர்களின் உறுதியை நமது வாக்குகளாக மாற்றிட களப் பணியாற்றிடுவோம்.

BSNL பொதுத்துறையாக என்றும் மக்கள் சேவையில் தொடர்ந்திட, எது வரினும் எம் ஊழியர் நலன் காத்திட *NFTE BSNL சங்கத்தை முதன்மை சங்கமாக வெற்றி பெற செய்வோம்.*