மாநில செயற்குழு விருதுநகர்

NFTE BSNL ன் தமிழ் மாநில செயற்குழு விருதுநகர் பம்பாய் மண்டபத்தில் ஜூலை 01, 02 தேதிகளில் நடைபெற்றது.

தோழர் காமராஜ் மாநிலத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தோழர் நடராஜன் மாநிலச் செயலர் ஆய்படுபொருளை அறிமுகம் செய்து உரைநிகழ்த்தினார்.

தோழர் செம்மல் அமுதம் சம்மேளனச் சிறப்பு அழைப்பாளர் மைசூர் மத்திய செயற்குழுவின் முடிவுகளை விளக்கினார்.

தோழர் பட்டாபிராமன் மேனாள் மாநில செயலர் அவர்களின் பொருள் பொதிந்த உரை செயற்குழு\nவின் சிறப்பு அம்சமாக அமைந்தது.
BSNL நிறுவனம் தற்போது சந்தித்து வரும் நெருக்கடிகள், அதிலிருந்து BSNL மற்றும் பணியாற்றும் தொழிலாளர்கள் நலன் காக்கும் வழிவகைகளை விரிவாக விளக்கினார்.

மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் விவாத்தில் கலந்து கொண்டு சிறந்த பங்களிப்பு செய்தனர்.உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல், BSNL புத்தாக்கம் , புணரமைப்பு மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பளம் பல மாதங்கள் வழங்கப்படாத நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

தோழர் சண்முகம் தென்காசி மாநில சங்க நிர்வாகி (பணி நிறைவு ) அவர்கள் செயற்குழுவில் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

தோழர்கள் சம்பத், ரமேஷ், மதிவாணன் உள்ளிட்ட விருதுநகர் வரவேற்பு குழுவினர் அயராது உழைத்து அருமையான விருந்தோம்பலுடன் சிறப்பான செயற்குழுவை நடத்தினர் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டனர்.