தோழர் ஜெகன் – நினைவு நாள் ஜூன் 7

மனித நேயப் போராளி தோழர்.ஜெகன் 17-05-1931-ம் ஆண்டு பிறந்து 75 ஆண்டுகள் வாழ்ந்து 07-06-2006-ம் ஆண்டு மறைந்தார்.

தோழர்.ஜெகன் மறைந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டது.

தன் வாழ்நாளில் 50 ஆண்டுகளுக்கு மேல் தொழிலாளிக்காக சிந்தித்து, உழைத்து, இயக்கத்திற்காகவே வாழ்ந்து மறைந்த வர்க்கப் போராளி தோழர் ஜெகன்.

ஜெகனை இழந்து

ஆண்டுகள் 13 ஆனாலும்

அவரின் அன்பு முகமும்

நேசப் புன்னகையும்

தோழமை உணர்வும்

மறையவில்லை!

அடிமட்ட தொழிலாளியாய் வாழ்க்கையை தொடங்கிய

நம் தோழர்களின் ஒவ்வொருவர் வாழ்க்கை பயணத்திலும்

நிழலாய் துணை நின்றவர் நம் தோழர் ஜெகன்.

பலருக்கு நிம்மதியான வாழ்வு, பொருளாதார வளர்ச்சி, சமூக அந்தஸ்து பெற்றுத்தந்த தலைவர் தோழர் ஜெகனின் நம்மை விட்டு பிரிந்த நாள் ஜுன் 7.

அன்பு, பாசம், நேசம், தோழமை இவற்றின் இலக்கணம்மாய் வாழ்ந்த தோழர் ஜெகன்.

மனித நேயத்தின் அடையாளம் தோழர் ஜெகன்.

விம்ர்சனம் செய்வோரிடமும் வியத்தகு தோழமையைக் காட்டிய தோழன் ஜெகன்.

தோழர் ஜெகன் வாழ்ந்த காலத்தில் “தோழர்களுக்கு ஊக்கம் அளித்த லட்சியம் மானுட விடுதலை. ஒரு கம்யூனிஸ உலகம் பற்றிய கற்பனை. இது இருந்ததனால்தான் தோழர்கள் கடுமையாக வேலைசெய்தார்கள். ஒரு நாளுக்கு ஏழு எட்டு மணிநேரம் தோழர்கள் சங்கவேலை செய்தது தொழிலாளிக்கு கூலி உயர்வுக்காக அல்ல. கம்யூனிசக்கொள்கைக்காகத்தான்.”

தோழர் ஜெகன் போன்ற தலைவர்கள் நம்மை விட்டு பிரிந்த பின்னர்

“தொழிலாளிக்கு கொள்கைமேல் நம்பிக்கை மெல்ல மெல்ல குறைந்து போயிற்று. அதன்பின் தொழிற்சங்க இயக்கம் நடத்தும் போராட்டங்கள் பொருளாதார லாபங்களுக்காக நடத்தும் பேரமாக மாறியது. அதைத்தான் தொழிலாளியும் நம்புகிறான். ஒரே சமயம் நாலைந்து தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறான். இன்னது வேண்டும் இல்லாவிட்டால் அங்கே போய்விடுவேன் என மிரட்டுகிறான். இன்றைக்கு இருக்கும் தொழிற்சங்கங்கள் மெல்ல தன்பாத்திரம் இழந்து ஒரு பேரம்பேசும் குழுக்களாக மாறி வருகிறது. இங்கேதான் வீழ்ச்சி ஆரம்பம் ஆயிற்று”

தோழர் ஜெகன் நம்மைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை அவர் காட்டிய அன்பிற்கு தோழமைக்கு இணையாக யாருமில்லை!

ஜுன் 7 தோழர் ஜெகனின் நினைவு நாள், ஆனால் நம் மனம் நினைவஞ்சலி செலுத்த மறுக்கிறது!

கேஷவல், ஒப்பந்த தொழிலாளர்கள் நலன் மீட்க மீண்டும் வேண்டும் ஜெகன்!

தோழர் ஜெகன் இன்றும் என்றும் வேண்டும்,

அவருடன் வாழ்ந்த அந்த
பொக்கிஷமான நாட்கள்,

தோழமையின் திருஉருவாக

அன்பின் அடையாளமாக

அறத்தின் புதல்வனாக

தர்மத்தின் தலைவனாக

காலத்தை வென்ற தலைமகனாக

நேர்மையின் உருவமாய்,

காலங்கள் கடந்தாலும்

ஆண்டுகள் சென்றாலும்

நம் மனதில்

என்றும் நிலைத்திருப்பார்.

தோழர் ஜெகனே!

தலைவனே!

உன்னால் ஈர்க்கப்பட்ட நாங்கள்

உன் லட்சியப் பாதையில்

உன் படைவரிசையில் முதல் அணியாய் நிற்போம்!

நீ எங்களை வழி நடத்து!

நாங்கள் உன் வழி நடப்போம்!