BSNL நிறுவனம் காக்கும் ஒரே சிந்தனையுடன் தேர்தல் களம் காண்போம்

8-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் அறிவிப்பு…

8-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று 03-06-2019 BSNL நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தலில் பங்கு பெறும் சங்கங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01-07-2019

தேர்தலில் போட்டியிட தகுதியுள்ள சங்கங்கள் அறிவிக்கப்படும் நாள்: 11-07-2019

சங்கங்கள் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள கடைசி நாள்: 18-07-2019

சங்கங்களின் இறுதி தகுதிப்பட்டியல் வெளியாகும் நாள்: 25-07-2019

தேர்தல் நடைபெறும் நாள்: 16-09-2019

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்: 18-09-2019

8-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் விதிகள் அமுலுக்கு வந்துள்ளதால் GROUP ‘C’ & ‘D – மூன்றாம் பிரிவு மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு மாற்றல் உத்திரவுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. 21-06-2019 வரை மாற்றல் உத்திரவுகள் அமுல்படுத்தப்படலாம். 21-06-2019-க்குப்பின் அமுல்படுத்த இயலாது.

கீழ்க்கண்ட மாற்றல்கள் அமுலில் இருக்கும்:

பதவி உயர்வு மாற்றல்கள்…
TENURE மாற்றல்கள்
விருப்ப மாற்றல்கள்…
உள்ளூர் மாற்றல்கள்…

தோழர்களே…
BSNLன் நிதியாதரம், மார்க்கெட் ஷேர் முற்றும் அச்சுறுத்தும் நிலையில் உள்ள சூழலில்… தொழிற்சங்க இயக்கங்கள் வலுவாக உள்ள நமது நிறுவனத்தில் ஊழியர் நலன் காக்க… BSNL நிறுவனம் காக்கும் ஒரே சிந்தனையுடன் தேர்தல் களம் காண்போம்…