8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்

BSNL கார்ப்பரேட் அலுவலகத்தில் 27/05/2019 அன்று மாலை 0300 மணியளவில் 8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடத்துவது குறித்து பூர்வாங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உயர்திரு A M குப்தா GM SR தலைமை தாங்கினார். பெரும்பாலான சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சங்கங்களின் கருத்துக்களை GM SR கேட்டறிந்தார். ஒரு சில சங்கங்கள் தற்போது தேர்தல் நடத்த தேவையில்லை, தள்ளிவைக்கலாம் என்றனர். ஆனால் அந்த கருத்து ஏற்கப்படவில்லை. பெரும்பான்மையான உறுப்பினர்களை பிரிதிநிதிப்படுத்தும் NFTE, BSNLEU உள்ளிட்ட சங்கங்கள் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரினர்.

நிர்வாகம் தேர்தலை நடத்துவதற்கான உத்தேச அட்டவனையை முன் வைத்தது. ஜூன் 3ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியாகும். தேர்தல் முடிவுகள் செப்டம்பர் 18ம் தேதி அறிவிக்கப்படும். NFTE மற்றும் BSNLEU சங்கங்கள் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் தேர்தல் முடிவு வெளியாகும் வகையில் தேர்தல் அட்டவணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து பரிசீலிப்பதாக நிர்வாகம் உறுதி அளித்தது