கவன ஈர்ப்பு நாள்

கவன  ஈர்ப்பு  நாள்

தமிழ் மாநில சங்கத்தின் மாவட்ட செயலர்களின்  கூட்டம் திருச்சி மாநகரில் 13/05/2019 அன்று நடைபெற்றது. மாநில மட்டதில் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி  போராட்டம் நடத்திட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் வருகின்ற ஜுன் மாதம் 4 ம் தேதி தமிழகத்தில் கவன  ஈர்ப்பு  நாள் நடைபெறும்.

கோரிக்கைகள்:

 • ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட GPF, LIC, PLI, வங்கி, கூட்டுறவு சங்க தவனைத் தொகைகளை  அந்தந்த மாதத்தில் 7 ம் தேதிக்குள் உரிய கணக்கில் செலுத்திட வேண்டும்.
 • தவனைகள் தாமதமாக செலுத்தப்பட்டதற்கு ஊழியர்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை. எனவே தவனைகள் தாமதமாக செலுத்தப்பட்டதால் வங்கிகள் விதித்த  தண்டனைக்குரிய வட்டியை (penal interest) நிர்வாகம் ஏற்று கொண்டு செலுத்த வேண்டும்.
 • இதேபோல் LIC, PLI ஆகிய நிறுவனங்கள் விதித்துள்ள தாமதக் கட்டணத்தையும் (Late Fee) நிர்வாகம் ஏற்று கொண்டு செலுத்த வேண்டும்.
 • வங்கிகளுடனான MOU முடிவடைந்தால் , அதை உடனடியாக புதுப்பித்து ஊழியர்கள் தடையின்றி கடன் பெற்றிட வழி வகுக்க வேண்டும்.
 • PM கேடரில் தவறான fixation என்று DOT சொல்லியவர்களுக்கு Excess Payment recovery செய்யப்பட்டது. 2016  க்குப் பிறகு அப்படி பிடித்தம் செய்யபட்ட தொகையை திருப்பி தர ஒத்துக்கொள்ளப்பட்டது. பிடித்தம் செய்தவ்ர்களுக்கு பணத்தை உடனே திரும்ப வழங்க வேண்டும்
 • RM பணிக்காலத்தை மொத்த சேவைக் காலத்தில் சேர்த்து கணக்கிடுவதில் பல மாவட்டங்களில் பிரச்சினை நீடிக்கிறது. மாநில நிர்வாகம் வழிகாட்டி தீர்வுக்கு உதவிட வேண்டும்.
 • ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சினைகளை மாவட்ட மட்டத்தில் பேசிட Nodal Officer களை எல்லா மாவட்டத்திற்கும் நியமிக்க வேண்டும்.
 • ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரதி மாதம் 7 ம் தேதியில் சம்பளம் ஒப்பந்ததாரர்கள் வழங்கிடுவதை நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும்.
 • ஒப்பந்த ஊழியர்களின் EPF, ESIயை ஒப்பந்ததாரர்கள் முறையாக  கட்டுவதை உறுதி செய்திட வேண்டும்.
 • செல் டவர்களுக்கு EB கட்டணத்தை உடனுக்குடன் கட்டி, மின்சார துண்டிப்பை  தவிர்த்து தடையற்ற சேவை வழங்க வேண்டும்
 • வருவாய் இல்லாத,  நஷடத்தில் இயங்கும் 20/50 க்கு குறைவாக இணைப்புகள் உள்ள தொலைபேசி நிலயங்களை மூடுவது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும்.
 • Business Area உருவாக்கத்தில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று நடைமுறைப் படுத்த வேண்டும்.
  மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு நாள் ஜுன் 04 ல் மாநில அலுவலகத்தில், மாவட்டங்களில், மற்றும் கிளைகளில் அனைத்து தரப்பு ஊழியர்களையும் திரட்டி , உத்வேகத்துடன் நடத்திட மாநில சங்கம் அறைகூவல் விடுக்கிறது.