சஞ்சார் பவன் பேரணி

தோழர்களே! தோழியர்களே!!

05/04/2019   வெள்ளிக்கிழமை காலை  11.45 மணிக்கு CTO  மேற்கு வாயிலில்  இருந்து சஞ்சார் பவன் நோக்கி மாபெரும் பேரணி புறப்பட்டது.   இந்தியா முழுவதும் இருந்து  அதிகாரிகளும் ஊழியர்களும் பெருமளவில் (சுமார் 4000 பேர்) கலந்து கொண்டனர்.  ஐந்தர் மந்தர் பகுதியில் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது.   அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு NFTE யின் பொதுச்செயலாளர் தோழர் சந்தேஸ்வர் சிங்  தலைமை  தாங்கினார். CITU வின்  பொதுச்செயலர்  தோழர் தபன் சிங் அவர்களும் AITUC யின் துணைத்தலைவர்  டாக்டர் காங்கோ அவர்களும்   சிறப்புரை ஆற்றினர் . BSNLEU பொதுச்செயலாளர் தோழர். அபிமன்யு அவர்களும், SNEA யின்   பொதுச் செயலாளர் தோழர் சபாஸ்டின் அவர்களும்,  AIBSNLEA வின் பொதுச் செயலாளர் தோழர் பிரகலாதராய் அவர்களும், BMS பொதுச்செயலாளர் தோழர் சுரேஷ் அவர்களும், TEPU வின் உதவிப் பொதுச் செயலாளர் தோழர் ரஷித் கான் அவர்களும்  குழுமியிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் பேரணியின் நோக்கம் அவசியம் குறித்து உரை ஆற்றினர்.  AUAB யின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக இந்தியாவின் மூலை முடுக்கில் இருந்து வந்து பேரணியில்  கலந்து கொண்ட தோழர்கள் தோழியர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை AUAB தலைவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் இருந்து NFTE மாநில செயலர் தோழர்  நடராஜன் அவர்களும், தோழர் செம்மல் அமுதம் சம்மேளன சிறப்பு அழைப்பாளரும் கலந்து கொண்டனர்.

பின்னர் DOT யின் கூடுதல் செயலாளர்  உயர்திருஅனுஷ் பிரகாஷ் அவர்களை AUAB தலைவர்கள் சஞ்சார் பவனில் சந்தித்தனர். உடன் திருமதி சுஜாதா ராய் இயக்குனர் மனித வளம், 

திரு A M குப்தா GM (SR) பேச்சு வார்த்தையில் BSNL சார்பில் உடன் இருந்தனர்.  நமது கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. Internal Mechanismத்திற்கான குழுவின்  கூட்டம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்று வலியுத்தப்பட்டது.  பரிசீலித்து ஆவன செய்வதாக கூடுதல் செயலாளர் உறுதி அளித்தார்.