அரசும்,ஆப்டிக் வலைபின்னலும்

டெலிகாம் :- புதிய தேசிய தொலைதொடர்பு டிஜிட்டல் கொள்கை 2018 வெளியிடப்பட்டு 5ஜி சேவைக்கான நடைமுறைகள் துவக்கப்பட்டு வருகின்றன.1000 பில்லியன் டாலர் மதிப்பில் அந்நிய மூலதனம் பெறவும்,

4 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. CONNECT, PROPEL, SECURE என்பது கொள்கையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜியோ வருகையால் பல நிறுவனங்களின் சேவை நிறுத்தம் காரணமாக பல ஆயிரம் வேலை இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் புதிய அறிவிப்பு பலன் தருமா? என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் COAI டெலிகாம் வருவாய் கடும் போட்டி காரணமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.EBITDA வரிக்கு பிந்தைய வருவாய் கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை. எனவே AGR வருவாய் என்பதில் மாற்றம் செய்திட வேண்டும். வருவாயில் கீழ்கண்ட இனங்களின் வருவாய் AGR கணக்கில் கொண்டு வரக்கூடாது என கோரியுள்ளது.வட்டி,டிவிடெண்ட்,மூலதன சொத்து விற்றுவரும் வருவாய்,பங்கு விற்பனை மாற்றம் காரணமாக வரும் வருவாய், வாடகை, இன்சுரனஸ் இழப்பீடு வருவாய்,போன்ற இனங்களின் வருவாய் AGR ஆக கருதி அலைகற்றை,உரிமகட்டணம் கோரக்கூடாது. மேலும் அலைகற்றை பயன்பாடு கட்டணம் 4.8% வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. இது 1% ஆக குறைக்கப்படவேண்டும். லைசன்ஸ் கட்டணம் 8% AGR என்பது குறைக்கப்பட வேண்டும். துறையில் 539 மில்லியன் வயர்லஸ் இண்டர்நெட் வாடிக்கையாளர்கள் தினம்தோறும் 418,330 TB(1000GB-ONETB) டேட்டா பயன்படுத்தி வர்கின்றனர். 4 ஜியின் வேகம் 6 MBPS (உலக அளவில் 17 MBPS)என்பது 5 ஜியில் 10 GBPSஆக மாற்றிடவேண்டும். இந்த வேகத்தை அடைய கோபுரங்கள் அனைத்தும் ஆப்டிக் பைபர் கேபிள் மூலம் இணைக்கப்படவேண்டும். இந்தியாவில் உள்ள 5 லட்சம் கோபுரங்களில் 22 % மட்டுமே ஆப்டிக் இணைப்பை பெற்றுள்ளது. சீனாவில் 80% கோபுரங்கள் ஆப்டிக் கேபிள் 1090 மில்லியன் கி.மீ. மூலமும், அமெரிக்காவில் 440 மில்லியன் ஆப்டிக் கேபிள் கி.மீ.  மூலமும் இணைக்கபட்டுள்ளது. இந்தியாவில் ஆப்டிக் கேபிள் 110 மில்லியன் கி.மீ இணைப்பை பெற்றுள்ளது. எனவே இந்திய சந்தையில் ஆப்டிக் கேபிள் இணைப்பு 4 மடங்கு உயரவேண்டும். தனியார் வசம் ரூ1.2 லட்சம் கோடி மதிப்பில் ஆப்டிக் சொத்துள்ளது. மேலும் 2.5 லட்சம் கோடி முதல் 3 லட்சம் கோடி வரை மூலதனம் செலவு செய்ய வேண்டும். ஜியோ தனது கோபுரங்கள், ஆப்டிக் கேபிள் ஆகியவற்றை தனி நிறுவனமாக மாற்றிட உள்ளது.  BSNL ல் உள்ள 8 லட்சம் கி.மீ.ஆப்டிக் கேபிள் தனியார் நிறுவன கண்களை உறுத்த தொடங்கியுள்ளது. BBNL வசம் USO நிதி மூலம் பதிக்கப்பட்ட 3.13 லட்சம் கி.மீ கேபிள்கள்களை விற்க அரசு முடிவு செய்துள்ளது. டெலிகாம் பகுதி நாட்டின் மொத்த GDP வருவாயில் 6% வழங்கி வருகிறது.8% ஆக உயர்த்திட அரசு வேண்டும். 10 GBPS வேகத்தில் கிராமபுற இண்டெர்நெட் செயல்படவேண்டும் என அரசு விரும்புகிறது. IIM A பரிந்துரையில் ஆப்டிக் கேபிள்களை தனி நிறுவனமாக ஆக்கிட வேண்டும் என்பதை BSNL புத்தாக்கத்திற்க்கு முன் தேவை என கூறியுள்ளது. அடுத்து தனியார் நிறுவனங்கள் 5 ஜி சேவை வழங்கிட நமது ஆப்டிக் கேபிள்களை தனியாருக்கு திறந்து விட அரசு மூலம் துடிக்கிறது, ஆப்டிக் கேபிள், கோபுரங்கள் இணைப்பின் மூலம் 5 ஜி சேவையை 2022 ல் வழங்க தனியாருடன் அரசு இனைந்து பல திட்டங்களை தனியாருக்கு ஆதரவாக முன்னடுத்து வருகிறது. நாமும் BSNL ஆப்டிக் கேபிள் , கோபுரங்களை பாதுகாத்திட கவனமுடன் பாதுகாப்போம்.