தோழர் சேதுபதி பணி நிறைவு28/02/19

அறந்தாங்கியில் பணிபுரிந்தான்…மனதில்…அறம் தாங்கிப் பணிபுரிந்தான்…
அறந்தாங்கிப் பணிபுரிந்தான்..மனதில்…அன்பைத்தாங்கிப் பணிபுரிந்தான்..
செங்கொடி தாங்கி இயக்கம் வளர்த்தான்…சிந்தனை வளர்த்து செம்மை பெற்றான்…
கொள்கை தாங்கி வலுப் பெற்றான்…குணம் தாங்கி பெயர் பெற்றான்…
கலை இலக்கியத்தில் கால்பதித்தான்…கலை இலக்கியப்பெருமன்றத்தில் தடம் பதித்தான்…
விருந்தோம்பலில் இலக்கணம் படைத்தான்…விரிவான நட்பு வட்டத்தை விரும்பி வளர்த்தான்…
அண்ணாச்சி பொன்னீலனின் இதயம் கவர்ந்தான்…தன்னாட்சி கொண்ட தன்மான இதயம் படைத்தான்…
தோழமை தாங்கி துயர் துடைத்தான்…சேதுபதி என்னும் பெயர் படைத்தான்… ————————————————- இன்று 28/02/2019 பணிநிறைவு பெறும்அன்புத்தோழர்… ஆற்றல்மிகுஅறந்தாங்கி சேதுபதிஅவர்களின்பணிநிறைவுக்காலம்மண் பயனுற…மக்கள் பயனுற…தோழமை பயனுற…தொண்டர்கள் பயனுற…இளைத்தோர் பயனுற…எளியோர் பயனுற…
இனிதே அமைந்திட…வாழ்வாங்கு வாழ்ந்திட…மனமார வாழ்த்துகின்றோம்… வாழ்த்து சொல்ல : 9443219288