மாவட்ட செயலர்கள் கூட்டம் -11/12/2018

மாவட்ட செயலர்கள் கூட்டம் -11/12/2018

மாவட்ட செயலர்கள் கூட்டம் தோழர்.ப.காமராஜ்,மாநிலத்தலைவர் தலைமையில் சென்னை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. காலவரையற்ற வேலை நிறுத்தம்,ஒத்திவைப்பு,உறுதிமொழி அதன்பின் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தோழர்கள் பட்டாபி, ஆர்.கே, முத்தியாலு, சுப்பராமன் கலந்து கொண்டு போராட்ட களத்தின் பின்புலம், களநிலை, கோரிக்கை தன்மை, முன்னேற்றம், ஊழியர்களின் விழைவு, ஆகியவை குறித்து வழிகாட்டல் உரை நிகழ்த்தினர். மாவட்ட செயலர்கள்,மாநில சங்க நிர்வாகிகள், தோழர்கள் அ.இ.சங்க நிர்வாகிகள் பழனியப்பன், செம்மல் அமுதம், எஸ்.எஸ்.ஜி. உள்ளிட்ட தோழர்கள் கருத்துகளை முன் வைத்தனர். மாநில செயலர், மாநில தலைவர் போராட்ட தயாரிப்பு, பேச்சுவார்த்தை குறித்து விளக்கினர். ஊடகங்களில் பல்வேறு தகவல்களை தோழர்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். மத்திய சங்க முடிவுகளை ஏற்பதுடன், போராட்டம் குறித்த நமது எதிர்பார்ப்புகள், கருத்துகளை மத்திய சங்கத்திற்க்கு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட,மாநில சங்கத்திற்க்கு தெரிவிக்காமல்,ஒப்புதல் பெறாமல் வேறு மாநில செயலரை அழைக்க கூடாது என்ற மத்திய சங்க முடிவுகளை மீறக்கூடாது என திருச்சி மாவட்ட ஆட்டோகிளைக்கு மாவட்ட செயலர் மூலம்  அறிவுறுத்த முடிவுசெய்யப்பட்டது. திருச்சி ஆட்டோ கிளை செயலர் கூட்டத்தை நட்த்திடும் முடிவை தவிர்க்க வேண்டும் என் கோரப்பட்டுள்ளது.

மாநில செயற்குழு முடிவுப்படையில் கஜா புயல் நிவாரணம் மிக சிறப்பாக நன்கொடை பெறப்பட்டு பாதித்த இடங்களில் தோழர்கள் ஆர்.கே.,சேது. நடராஜன், மாநில செயலர், செல்வம்,பொதுசெயலர்,விஜய், கிள்ளி வளவன், பாலமுருகன் உள்ளிட்ட தோழர்கள் வழங்கினர். நன்கொடை அளித்த அனைவருக்கும் மாநில சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. மேலும் தொடர்ந்து உதவிட அனைவரையும் வேண்டுகிறது.