கால வரையற்ற வேலை நிறுத்தம் டிசம்பர் 10 ம்தேதிக்கு ஒத்திவைப்பு

கால வரையற்ற வேலை நிறுத்தம்  டிசம்பர் 10 ம்தேதிக்கு ஒத்திவைப்பு..

BSNL ஊழியர்கள், அதிகாரிகள் இணைந்து  ஊதியமாற்றம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளுக்காக ஒன்றரை வருடமாக பல்வேறு போராட்ட வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. ஊழியர்கள் ,அதிகாரிகள் ஒற்றுமை காரணமாக BSNL நிறுவனம் ஊதியமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளில் சாதகமாக பேசி வந்தாலும் நடைமுறையில் DOT ஆதிக்கம், மோசமான நிதிநிலை காரணம் காட்டி கோரிக்கைகள் மறுக்கப்பட்டு வந்தன. 06/11/2018 DOT யின் மோசமான கடித உள்ளடக்கம் AUAB  தலைவர்களை காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதை தவிர வழியில்லை என்ற நிலையை மேற்கோள்ளசெய்தது .தலைவர்கள் நாடு முழுவதும் தலைவர்கள் சுற்றுபயணம் செய்து வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட ஊழியர்களை ஆயத்தம் செய்தனர். தமிழ் நாட்டிலும் மாவட்டங்கள் தோறும், ஊர்கள் தோறும் முன்னணி தலைவர்கள் ஊழியர்களை போராட்டத்திற்க்கு ஆயத்த படுத்தினர். CMD, AUAB தலைவர்களுடன் 30/11/2018 அன்று இரு கட்டமாக பேச்சுவார்த்தை நடை பெற்ற பொழுதும் ,பிரச்சனைகளின் தீர்வில் தீர்மானகரமான ஒப்புதலை தரவேண்டிய DOT எதிரிடையாக இருந்த காரணத்தால் போராட்டம் உறுதியாக நடக்கும் என AUAB தலைவர்கள் தெரிவித்து தயாரிப்பை மேலும் தீவிரமாக்கிட அறைகூவல் விடுத்தனர். 02/12/2018 அன்று  DOT கூடுதல் செயலர், DOT செயலர்  BSNL-CMD, மற்றும் அதிகாரிகள் அடங்கிய பேச்சு வார்த்தை AUAB தலைவர்களுடன் நடை பெற்றது. 4G அலைக்கற்றை வழங்கல், ஓய்வூதிய மாற்றம், ஓய்வூதிய கொடை அரசின் விதிகள் அடிப்படையில் செலுத்துதல் சாதகமானமுன்னேற்றத்தை DOT உறுதிசெய்த நிலையில் ஊதியமாற்றம் குறித்த DOT நிலையை AUAB ஏற்க மறுத்த்து. ஊதிய மாற்றம் குறித்துஅமைச்சருடன் 03/12/2018 அன்று பேச்சு வார்த்தை நடைபெற உறுதி அளித்தது. அதனடிப்படையில் AUAB டிசம்பர் 3 வேலை நிறுத்தத்தை டிசம்பர் 10 ம் தேதிக்கு ஒத்திவைத்தது. DOT வழங்கிய கடித்ததில் ஊழியர்களின் ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்திடவும், இறுதி செய்திடவும் BSNL-CMD க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் கடந்த காலங்களில் BSNL மேம்பட பணியாற்றியதை பாராட்டி எதிர்காலத்திலும் சிறப்பாக பணியாற்றிட வேண்டினர், DPE வழிகாட்டுதல் குறித்த அம்சங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. DOT DPE வழிகாட்டுதலை பரிவுடன் அணுகும் என கூறியுள்ளது.

கடந்த பல நாட்களுக்கு மேலாக வேலைநிறுத்த தயாரிப்பை மேற்கொண்ட  தோழமை சங்க தலைவர்கள்,மாவட்ட செயலர்கள், மாநில சங்க நிர்வாகிகள்,கிளை செயலர்கள் முன்னணிதோழர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றியை மாநில சங்கம்  தெரிவித்துக்கொள்கிறது.

பிரச்சனை தீர்வு சாதகமாக மாற்றம் பெற்றிட தொடர்ந்து விழிப்புடன் பணியாற்றுவோம்.கவனமுடன் செயலாற்றுவோம்.