AUAB சார்பில் பேரணி ஆர்ப்பாட்டம்

AUAB சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று 14.11.2018  மிக சக்தியோடு  பேரணி நடத்தப்பட்டுள்ளது .  3.12.2018 முதல் நடைபெறவுள்ள  காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்  அகிலஇந்திய மட்டத்தில் அனைத்து சங்கங்களையும் இணைத்து கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தலமட்டங்களில் அனைத்து தோழர்களையும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க செய்திடுவோம் .

சென்னை CGM அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் AUAB தலைவரும்,NFTE ன்   மாநிலச்செயலருமாகிய  தோழர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்கூட்டத்தில் AUAB ன் கன்வீனரும் ,BSNLEU AGS / மாநிலத்தலைவருமாகிய தோழர் செல்லப்பா , NFTE  மாநிலத்தலைவரும் அகிலஇந்திய செயலருமாகிய தோழர் காமராஜ், AIBSNLEA மாநிலசெயலர் தோழர் துரையரசன்,SNEA மாநிலச்செயலர் தோழர் வளனரசு, AIGETOA மாநிலச்செயலர் தோழர் சரவணகுமார் ,ஓய்வூதியர் நலச்சங்க மாநிலத்தலைவர் மாணிக்கமூர்த்தி  ஆகியோர் உரையாற்றினார்கள். கூட்டத்தில் TEPU,AIBSNLOA  சங்க தோழர்கள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட தோழர்களும், தோழியர்களும் கலந்துகொண்டனர்.இறுதியில் BSNLEU மாநிலப்பொருளர் தோழர் சீனுவாசன் நன்றி கூறி முடித்துவைத்தார்