மத்திய சங்க செய்திகள்

மத்திய சங்க செய்திகள்

செப் 5 Director (PSU) , DOT அவர்களை மத்திய சங்கம் சந்தித்து ஊதிய மாற்றம் வழங்கும் சக்தி விதிவிலக்கு அளிக்கும் அமைச்சரவை குறிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. விதிவிலக்கு அதிகாரிகள் / ஊழியர்களுக்கும் சேர்த்து பெறநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

BSNL IDA  ஓய்வூதியம் வழங்க விளக்கம் கேட்டு ஓய்வூதிய இலாக்காவிடம் அணுகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஓய்வூதிய கொடைரூ700 கோடி BSNL வழங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

BSNL க்கு 4ஜி சேவை  துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டிராப்ட்ஸ்மேன் கேடர் பெயர் மாற்றம் சிவில் பகுதி ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. டெலிகாம் பகுதியில் பணியாற்றும் டிராப்ட்ஸ்மேன் கேடர் பெயர் மறுக்கப்பட்டுள்ளது. உத்திரவில் மாற்றம் கோரப்பட்டுள்ளது.

NE 4 முதல் NE 6 வரையிலான லைன்மேன் உள்ளிட்ட 19 கேடர்களுக்கு ஜாயிண்ட் டெக்னிசீயன் என் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக JTO- பதவியில் JE பணியாற்றும்/பணியாற்றிய ஊழியர்களுக்கு FR 22(1) (a)(i)  அடிப்படையில் வழங்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நிர்வாகம் தொட்ரந்த அப்பீல் தள்ளுபடி செய்தகாரணத்தால் அவர்களுக்கு பலன் வழங்கிட மத்திய சங்கம் கோரி உள்ளது,

தற்காலிக பணிநீக்க காலத்தை CDA அடிபடையில் அல்லாது மத்திய அரசு FR/SR உத்திரவு அடிப்படையில் கருதப்படவேண்டும்.

JE பதவி உயர்வு தேர்வில் 15% பதவிகளை சீனியாரிட்டி அடிப்படையில் வழங்க குறிப்பை மத்திய சங்கம் வழங்கியுள்ளது.

ஹரித்வார் நகரில் மத்திய சங்கத்தின் தேசியகுழு கூட்டம் அக் 24/25 தேதிகளில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள முன் பதிவுசெய்தவர்கள் மாநில சங்கத்திற்க்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

கன்பர்மேசன் தேர்வில் தேர்ச்சி பெறாத எழுத்தர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க நிர்வாகம் ஏற்று உத்திரவு வழங்க உள்ளது.

JTO- போட்டி தேர்வு காலியிடங்கள்  கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் தேர்வு அறிவிக்கப்பட உள்ளது.

28/01/2018 நடைபெற்ற JE தேர்வில் நமது சங்க தொடர் முயற்சியால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 0.5 % என்பதை 1 % ஆக கணக்கிட்டு பதவி உயர்வு வழங்க கோரப்பட்டுள்ளது.

மாவட்ட, மாநில அலுவலகங்களில் உதவி மேலாளர் பதவி உருவாக்கிட தேசியகுழு முடிவுப்படி இரு நபர் கமிட்டி அமைக்க மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாநில அலுவலகங்களில் PA பதவிகளை நிரப்பிட வலியுறுத்தப்பட்டுள்ளது.

பதவிகள் கணக்கிடும் பணி நடை பெற்று வருகிறது.விரைவில் தேர்வு நடத்திட  நிர்வாகம் ஏற்கப்பட்டுள்ளது.