தேசிய கவுன்சில் நிலைக்குழு கூட்டம்-பிரச்சனை தீர்வுகள்

தேசிய கவுன்சில் நிலைக்குழு கூட்டம்-பிரச்சனை தீர்வுகள்

08/08/2018 அன்று தேசிய கவுன்சில் நிலைக்குழு கூட்டம் தேசிய கவுன்சில் கூட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தது.சங்கங்களின் கடும் அதிருப்தியை தெரிவித்தபின் கீழ் கண்ட தீர்வுகள் எட்டப்பட்டன.

 • E1 ஊதிய விகிதத்தில் ஊழியர்களின் பதவிஉயர்வு குறித்து இயக்குனர் குழு கூட்டத்திற்க்கு குறிப்பு இந்த வாரத்தில் அனுப்ப பட உள்ளது.

 • விடுபட்ட கேடர்களுக்கான கூடுதல் ஒரு ஆண்டு ஊதிய உயர்வு தொகை வழங்க இயக்குனர் குழு கூட்டத்திற்க்கு குறிப்பு அனுப்ப்பட்டுவிட்டது.

 • கேசுவல் ஊழியர்களின் பணிக்கொடை பிரச்சனை CA பிரிவுக்கு அனுப்ப பட்டுள்ளது..ஒப்புதல் பெற்றவுடன் அமுலாகும்.

 • ஆந்திரா/தெலுங்கான பிரிவினை பிரச்சனைகள் விரைவில் /தீர்க்கப்படும்

 • எழுத்தர்களின் கன்பர்மேசன் தேர்வு, 31/08/2018 க்கு முன்னரும்,பதவி உயர்வு தேர்வுகள் 31/12/2018 க்கு முன்னரும் நடத்திட மாநில நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

 • 28/01/2018   JE தேர்வு முடிவுகள் பரிசீலிக்கப்பட்டு DIR(HR) ஒப்புதலுக்கு முன் வைக்கப்பட்டுள்ளது.

 • RTP  சேவை காலத்தை சேவையாக கருதும் நீதிமன்ற தீர்ப்பை அமுல் படுத்திட ஓக்கு அனுப்பப்படும்.

 • ON-LINE தேர்வுக்கு ஊழியர்களை தயார் செய்ய 15 நாள் பயிற்சிவழங்கப்படும்.

 • IQ பராமரிப்பு , கமிட்டிஅமைப்பது,ஆன்லைன் பதிவு,குறித்து விவாதிக்கப்பட்டது.

 • விதி 55(a) CDA RULES  2006 பரிசீலனை கமிட்டி மாநில மட்டத்திலும்,மறுபரிசீலனை குறித்து வழிகாட்டலும் கோரப்பட்டது.

 • மாநில /மாவட்டங்களில் துணை மேலாளர் பதவிகள் உருவாக்கம் குறித்த கமிட்டி அமைக்க வேண்டும்.

 • சங்க நிர்வாகிகளுக்கு தொலைபேசி வழங்குவதில்பாரபட்சம் நீக்க வேண்டும்.