அமைச்சர் சந்திப்பு

AUAB தலைவர்கள் மத்திய அமைச்சரிடம் சந்திப்பு
அன்புள்ள தோழர்களே,
பாராளுமன்றத்தில் AUAB தலைவர்கள் 01.08.2018 அன்று மத்திய அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்களை சந்தித்தனர். கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தோழர் M.B.ராஜேஷ் அவர்கள் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததோடு, அவரும் இன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கு பெற்றார்.
தோழர் P.அபிமன்யு GS BSNLEU, தோழர் ஷேசாத்ரி Dy.GS NFTE, தோழர் K.செபாஸ்டியன் GS SNEA, தோழர் பிரகலாத் ராய் GS AIBSNLEA, தோழர் ரவி ஷில் வர்மா GS AIGETOA, தோழர் சுரேஷ் குமார் GS BSNL MS, தோழர் S.D.ஷர்மா GS ATM மற்றும் தோழர் J.விஜயகுமார் Dy.GS TEPU ஆகியோர் இன்று இந்த கூட்டத்தில் பங்கு பெற்றனர்.
24.02.2018 அன்று மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கூறப்பட்ட உறுதி மொழிகள் அமலாக்கப்படாதது தொடர்பாக தங்களின் வருத்தங்களை AUAB தலைவர்கள் தெரிவித்தனர். உறுதிமொழிகளின் அமலாக்கம் தொடர்பாக கடந்த ஐந்து மாத காலமாக மத்திய அமைச்சரோ, தொலை தொடர்பு துறையின் செயலாளரோ, ஒரு கூட்டத்தைக் கூட நடத்த வில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
1. 3rd PRCயின் AFFORDABILITY பிரிவிலிருந்து BSNLக்கு விலக்கு அளிப்பதற்கான உறுதி மொழி மத்திய அமைச்சரால் வழங்கப்பட்டது. எனினும், அதற்கு தேவையான அமைச்சரவைக் குறிப்பு தயாரிப்பதற்கான பணிகளை DOT துவங்கவே இல்லை.
2. ஊழியர்களின் ஊதிய விகிதத்தின் உயர்ந்த பட்ச அளவிற்கு பதிலாக அரசாங்க உத்தரவின் படி ஊழியர்கள் வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்கீட்டை BSNL நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும் என மத்திய அமைச்சர் தொலை தொடர்பு செயலாளருக்கு வழிகாட்டினார். ஆனால் இதற்காக இதுவரை DOT எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
3. BSNL ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தொலை தொடர்பு துறை செயலாளருக்கு மத்திய அமைச்சர் வழிகாட்டினார். அது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
4. BSNL நிறுவனத்திற்கு 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சர் உறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை BSNL நிறுவனத்திற்கு அது வழங்கப்படவில்லை.
விவாதங்களுக்கு பின் BSNLக்கு 4G ஸ்பெக்ட்ரம் வழங்குவது அரசாங்கத்தின் கைகளில் உள்ளது என்றும் அது விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய பங்கீடு தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக தொலை தொடர்பு துறை செயலாளரோடு ஆகஸ்ட் 3ஆம் தேடி விவாதிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
மேலும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுப்புவதுடன் BSNLக்கு வருவாயையும் ஈட்டித்தர வேண்டுமென மத்திய அமைச்சர் கூறினார். மிகக் கடுமையான விலை குறைப்பில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோவிற்கு கடுமையான போட்டியை தாங்கள் கொடுத்து வருவதாக AUAB தலைவர்கள் பதிலளித்தனர். இத்தகைய கூட்டத்தை ஏற்பாடு செய்து பிரச்சனைகளை விவாதித்த மத்திய அமைச்சருக்கு தோழர் M.B.ராஜேஷ் MP நன்றி தெரிவித்தார்.
AUAB தலைவர்கள் இந்த கூட்டத்தை வழங்கிய மத்திய அமைச்சருக்கும், அதே போல இதற்கான ஏற்பாடுகளை செய்த தோழர் M.B.ராஜேஷ் MPஅவர்களுக்கும் தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.