CENTENARY YEAR OF NELSON MANDELA JLUY 18/2018

தோழர் நெல்சன் மண்டேலா அவர்களின் நூற்றாண்டு விழா ஜுலை 18/2018 முதல் துவங்குகிறது.

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சிமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

நீண்ட போராட்டத்தின் பின், அடக்குமுறையாளர்களுக்கும், அடக்கப்பட்டவர்களுக்கும் இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளில் மண்டேலா ஈடுபட்டார். அவற்றில் முக்கியமானது உண்மையும் நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக் குழுவை (Truth and Reconciliation Commission) அமைத்து பழிவாங்கலைத் தவிர்த்து உண்மையையும் நியாயத்தையும் பெறுவதற்கான ஒரு முறைமையை அதனூடாக ஏற்படுத்தியது ஆகும். உலக வரலாற்றுக்கே, ஆண்டைகள், அடிமைகள் உண்மைகளை அறிந்து மன்னித்து இணக்கமாக வாழ்வதற்கான ஒரு சிறந்த முன்மாதிரியாக இந்த முறைமை கருதப்படுகிறது.

5 டிசம்பர் 2013 அன்று தனது 95வது அகவையில் காலமானார்.

நேரு சமாதான விருது[

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு “நேரு சமாதான விருது” வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார்.

பாரத ரத்னா விருது[

1990-ல் இந்தியாவின் ‘பாரத ரத்னா‘ விருதும் வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.[10]

நோபல் பரிசு‍[

1993 இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.[11]

சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்

தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான சூலை 18ம் தியதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.[12]

இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் திருவுருவச்சிலை

ரசிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் முன்னிலையில், சர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஆபிரகாம் லிங்கன் அருகில் உரிய நெல்சன் மண்டேலாவின் ஒரு வெண்கல சிற்பம் 30 ஆகத்து 2007 இல் இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டது. அது குறித்த ஒரு உரையில், நெல்சன் மண்டேலா பாராளுமன்ற சதுக்கத்தில் கருப்பு மனிதன் ஒருவனின் சிலை இருக்கும் என்று 1962 இல் கண்ட கனவு நிறைவேறியது என்று கூறினார்.[13]

நிறவெறி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்த நெல்சன் மண்டேலாவை உலக நாடுகள் பலவும் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. அந்த வகையில் சுமார் 250க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.