மாநில செயலர்கள் கூட்டம் புது டெல்லி

NFTE – BSNL அகில  இந்திய சங்கம்

மாநில செயலர்கள் கூட்டம் புது டெல்லி

நாள்  29 மற்றும் 30 ஜூன் 2018

 

நமது NFTE – BSNL அகில  இந்திய சங்கத்தின் மாநில செயலர்கள் கூட்டம் புது டெல்லியில் 2018 ஜூன்   29 மற்றும் 30 ஆகிய தேதிகளீல் நடைபெற்றது ஹோட்டல்  டாக்கா இன்டர்நேஷனலீல் காலை 1000 மணியளவில் தோழர் இஸ்லாம் அகில இந்தியா தலைவர் அவர்கள் தலைமையில் துவங்கியது.

 

தோழர் சந்தேஸ்வர் சிங் பொது செயலாளர் அவர்கள்  ஆயப்படு  பொருளை  அறிமுகம் செய்து வைத்து கூட்டத்தை துவக்கி வைத்தார். தனது துவக்க உரையில் BSNL முன் உள்ள சவால்கள், ஊழியர் பிரச்சனைகள் குறித்து விரிவாக விளக்கினார்,

 

  1. சம்பள பேச்சு வார்த்தை கூட்டு குழு அறிவிப்பு வெளியாவது, மற்றும் அதில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மட்டும் இல்லாமல் அணைத்து சங்க தலைவர்களையும் குழுவில் சேர்க்க வேண்டும் என்று நம் சங்கம்  வலியுறுத்தும்

 

  1. .அனைத்து சங்கங்களுக்கும் பிரதிநிதித்துவம் பெறுவதன் மூலம் ஒன்றுபட்ட சம்பள கோரிகையை உருவாக்கி , விரைவில் ஊழியர் தரப்பு ஆலோசனையை இறுதி செய்ய முடியும்.

 

  1. நமது சம்பள மாற்றம் குறித்த DPE இன் Affortability clause லிருந்து விலக்கு பெற மத்திய அமைச்சரவையின் குறிப்பு தயாரிப்பதிலும் அதற்கு ஒப்புதல் அளிப்பதற்கும் முன் உள்ள பல்வேறு நிலைகளையும், அதனால் ஏற்படும் காலதாமதம் குறித்தும் விளக்கினார்

 

  1. நமது சங்கம் விரைவில் விலக்கு பெறுவதற்கு அணைத்து முயற்சிகளையும் செய்யும்.

 

  1. மாநில செயலர்கள் தங்கள் மாநிலங்கலில் ஊழியர்களுக்கு நிலைமைகளை தெரிவித்து போராட தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
  2. நமது ஊழியர்களுக்கு service SIM ல் Rs 429/- பிளான் , தினமும் 1GB  டாட்டா ,அமுல் படுத்தப்படுவதில் நமது சங்கத்தின் முயர்ச்சி களை  விளக்கினார்

 

  1. இலாக்கா தேர்வுகள் ATT to  TT ,. TT  to  JE ஆகியவற்றில் உள்ள நெகடிவ் மார்க் நீக்கம்  மற்றும் 15% JE  காலியிடங்கள்  பனி முப்பின் அடிப்படையில் வழங்கப்படுதல் ஆகியவற்றில்  நம் சங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை விளக்கினார்.

 

  1. நமது கோரிக்கைகளை முன்னெடுக்கும் அதே நேரத்தில் BSNL  வருவாயை பெருக்கிட நாம் முனைப்புடன் செயல்படவேண்டியதன்   தேவையை விளக்கினார்

 

அகில இந்திய தலைவர் தோழர் இஸ்லாம் அவர்கள் தனது தலைமை உரையில் மாநில செயலர்களை ஆக்கபூர்வ ஆலோசனைகளை கிழ்கண்ட பிரத்தியேக விஷயங்கள் குறித்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார். குறிப்பாக

 

.     1, இலாக்கா தேர்வுகளை , தேர்வு அட்டவணைப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தவேண்டும்

 

  1. T T கேடர் மற்றும் மல்டி டாஸ்கிங் கேடர்களை (மற்ற மத்திய அரசு துறைகளீல் உள்ளது போல் ) உருவாக்கிட வேண்டியதின் அவசியம்

 

3    புதிய  பதவி உயர்வு கொள்கை , அதிகாரிகளுக்கு உள்ளது போல் நமது ஊழியர்களுக்கு பெற வேண்டும்

 

4 புதிய RR விதிகள் JAO இலாக்கா தேர்வுக்கு உருவாக்கிட வேண்டும்.

 

5 NE 1  to  NE 6 வரை உள்ள ஊழியர்களின் ஊதிய தேக்க நிலையை போக்கிட நடவடிக்கை எடுத்தல்

 

6  Sr Accountent கேடர் பிரச்னை தற்போது DOT  இடம் உள்ளது.அதன் மீது அழுத்தம் கொடுத்து தீர்ப்பதற்கு ஆன முயற்சியை  மேற்கொள்வது

 

நாடு முழுவதும் உள்ள 36 Telecom Circle  இருந்து  , ஒரு சில Circle தவிர பெரும்பான்மையான மாநில  செயலர்கள் கலந்து கொண்டு செழுமையான விவாதங்கலில் பங்கேற்றனர். இரண்டு நாட்களிலும்  மாநில செயலர்கள் விரிவான ஆலோசனைகளை  வழங்கினர் ,  தங்கள் மாநிலங்களில் உறுப்பினர் விவரம், வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் , பிரச்சனை தீர்வு, அகில இந்திய சங்கத்தின் சிறப்பான செயல்பாடு, NFTE தீர்க்கப்படாமல் உள்ள போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கூட்டாகவோ அல்லது தனித்தோ போராட வேண்டியதை வலியுறுத்தினர். மாநில செயலர்கள் கூட்டத்தை டெல்லியில் கூட்டியமைக்கு CHQ வை அனைவரும் பாராட்டினர்..

 

தமிழ் மாநில செயலாளர் தோழர் நடராஜன் தனது சிறப்பான பங்களிப்பை செய்தார். மாநில உறுப்பினரவிவரம், மாநில, மத்திய சங்க செயல் பாடுகள் ,சம்பள மாற்றம், தேக்க நிலை , பதவி உயர்வு , போனஸ், போராட்டங்கள், குறித்த தனது கருத்துக்களை அழுத்தமாக பதிவு செய்தார்.

 

STR  மாநில செயலர்  தோழர் அன்பழகன் , STR பகுதியின் பிரத்தியேக பிரச்சனைகளை விளக்கினார்.

 

தோழர் சந்தேஸ்வர் சிங் தனது நிறைவுரையில் மாநில செயலர்கள் அளித்த  ஆக்கப்பூர்வ ஆலோசனைகளின் அடிப்படையில்  CHQ செயல்படும் என்று உறுதி அளித்தார் .

  1. சம்பள மாற்றம்

2, புதிய பதவி உயர்வு திட்டம்

3 சம்பள தேதி மாற்றம்

4 போனஸ்

 

5 அங்கீகரிக்கப்பட்ட சங்கமான NFTE யை கலந்து ஆலோசிக்கமால் ஊழியர் நலன்களை பாதிக்கும் முடிவுகளை எடுத்தல் ( withdrawal of  One Increament of  Family  Planning )  ஆகிய தீவிரமான பிரச்சனைகளை முன்னிறுத்தி போராட்ட திட்டத்தை CHQ இறுதி செய்யும் .

 

 

 

பல்வேறு  அமைப்பு பிரச்சனைகளை கையாள்வதற்கு கமிட்டி களை CHQ அமைக்கும். காலிகட் மத்திய செயற்குழு முடிவு செய்த சம்பள  மாற்றத்திற்கான  உப குழு தொடர்ந்து செயல்படும்.

என்பது உள்ளிட்ட பல்வேறு செய்திகளை விளக்கி மாநில  செயலர்கள் எழுப்பிய பிரச்னை களுக்கு பதில் அளித்து உரை ஆற்றினார்..

 

AUA சார்ப்பிலே நடத்தப்படும் மாவட்ட தலைநகரங்களில் மற்றும் மாநில தலைநகரங்களில் 11 / 7 / 2018  ஆர்ப்பாட்டம், 24,25,26 /07/2018 ஆகிய நாட்களீல் உண்ணாவிரதம் ஆகியவற்றை  வலுவாக நடத்திடவும் தோழர் C சிங் பொதுச்செயலாளர்  அறை கூவல் விடுத்தார் .

 

அகில இந்திய தலைவர் தோழர் இஸ்லாம் மாநில  செயலர்களின் ஆழ்ந்த நிறைவான விவாதத்திற்கும் கருத்துக்களுக்கும் நன்றியை தெரிவித்து கூட்டத்தை 30ம் தேதி மாலை 0630 மணியளவில் நிறைவு செய்தார்.